நீங்க இங்க தான்மா இருக்கீங்க: பிறந்தநாள் அன்று ஸ்ரீதேவியின் மகள் கண்ணீர்

By Siva

Recommended Video

பிறந்தநாள் அன்று ஸ்ரீதேவியின் மகள் கண்ணீர்!- வீடியோ

மும்பை: தனது பிறந்தநாள் அன்று ஜான்வி கபூர் தனது தாயை நினைத்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார்.

துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி உயிர் இழந்தார். தாயை இழந்து ஜான்வி கபூரும், குஷி கபூரும் கவலையில் உள்ளனர். தாய் இல்லாமல் முதல் பிறந்தநாள் கொண்டாடினார் ஜான்வி.

தனது பிறந்தநாள் அன்று அவர் இன்ஸ்டாகிராமில் அம்மாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

பிறந்தநாள்

பிறந்தநாள்

பெற்றோர் மீது பாசமாக இருங்கள் என்பதே என் பிறந்தநாள் அன்று நான் உங்களை கேட்டுக் கொள்வதாகும். உங்கள் பாசத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்கள் தான் உங்களை பெற்றவர்கள்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

என் தாயை நினைவுகூர்ந்து அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர் மீது நீங்கள் செலுத்திய அன்பு தொடரட்டும். என் அம்மா தனது அன்பின் பெரும் பகுதியை என் தந்தையுடன் பகிர்ந்து கொண்டார்.

தந்தை

தந்தை

என் தாய், தந்தை இடையேயான அன்பு அழியாத ஒன்று. அவர்களை போன்று வேறு யாராலும் அன்பு செலுத்தியிருக்க முடியாது. அந்த அன்புக்கு மரியாதை செய்யுங்கள்.

வாழ்க்கை

வாழ்க்கை

நானும், குஷியும் எங்கள் தாயை இழந்துவிட்டோம். ஆனால் எங்கள் அப்பா தனது வாழ்க்கையையே இழந்துவிட்டார். என் தாய்க்கு அன்பு தான் முக்கியம். அவருக்கு வெறுப்பு, பொறாமை எதுவும் தெரியாது. நாமும் அது போன்று இருப்போமாக.

நன்றி

நன்றி

நாம் அன்பாக இருப்பதை பார்த்து என் தாய் மகிழ்ச்சி அடைவார். கடந்த சில நாட்களாக நீங்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. அது எங்களுக்கு நம்பிக்கை, தெம்பு அளித்துள்ளது. அதற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

கடவுள்

கடவுள்

நீங்கள் சென்ற பிறகு மனதில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அது போகாது என்பது தெரியும். கண்களை மூடினால் உங்களை பற்றிய நல்ல விஷயங்களே நினைவுக்கு வருகின்றது. நீங்கள் மிகவும் அன்பானவர், அதனால் தான் கடவுள் உங்களை அழைத்துக் கொண்டார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

நான் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பதாக என் நண்பர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் நீங்கள் தான் என்பதை தற்போது உணர்ந்துள்ளேன். என் உயிரின் ஒரு பகுதி நீங்கள் அம்மா. என் சிறந்த தோழி.

தங்கை

தங்கை

உங்களை பெருமை அடைய செய்வேன் அம்மா. நீங்கள் எங்களுடன் தான் இருக்கிறீர்கள். அதை என்னால் உணர முடிகிறது. குஷி, அப்பா மற்றும் என்னுள் இருக்கிறீர்கள் அம்மா என்று ஜான்வி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X