நீங்க இங்க சிங்கம் இல்லை.. என்னை எச்சரித்த சுதா கொங்கரா.. நடிகர் சூர்யா கொடுத்த பரபரப்பு பேட்டி!
சென்னை: நீங்க இங்க சிங்கம் இல்லை என சூர்யாவை சுதா கொங்கரா ஷூட்டிங் ஸ்பாட்டில் எச்சரித்துள்ளாராம்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று திரைப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகிறது.
இந்த ஆண்டு பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாதோ என ரசிகர்கள் ஏங்கிய நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

இது முழு பயோபிக் படம் இல்லை
சூரரைப் போற்று படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இந்தியா டுடேவுக்கு நடிகர் சூர்யா அளித்துள்ள சிறப்பு பேட்டி வைரலாகி வருகிறது. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் பயோபிக் உரிமையை வாங்கிய சுதா கொங்கரா இந்த படத்தை அப்படியே அவருடைய பயோபிக்காக எடுக்காமல் புதிய படமாக இயக்கி உள்ளார்.

என்ன தேவை
சூர்யாவின் நெருங்கிய தோழியான சுதா கொங்கரா 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஸ்க்ரிப்ட் உடன் தன்னை அணுகியதாகவும், இப்போதைக்கு விமானத்தை பற்றிய படம் எடுக்கும் தேவை என்ன இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு பதிலளிக்க இறுதிச்சுற்று படத்தை எடுத்து வெற்றி பெற்ற பிறகு, ஏகப்பட்ட ஆய்வுகளை நடத்தி எனக்கு இந்த கதையை புரிய வைத்தார் என்றார்.

ஏகப்பட்ட கண்டிஷன்
இந்த படத்திற்காக கோபிநாத் சாரை ஒரு முறை தான் ஆசி வாங்க சந்தித்தேன். அவரது உடல், மொழி, பாவனைகள் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்படியே சுதா கொங்கரா உருவாக்கிய நெடுமாறன் ராஜாங்கமாகவே வாழ முயற்சித்து இருக்கிறேன். ஏகப்பட்ட கண்டிஷன்களை இந்த படத்திற்காக சுதா என்னிடம் போட்டார் என்றார்.

நீங்க சிங்கம் இல்லை
மேலும், இதற்கு முன் நான் நடித்த எத்தனையோ படங்களின் சாயல் ஒரு இடத்தில் கூட வராமல் இருக்க வேண்டும் என்றும், கத்தி பேசும் இடங்களில், நீங்க சிங்கம் இல்லை. அப்படி ஏதும் வந்திடக் கூடாது என என்னை ரொம்பவே பயங்கரமாக எச்சரித்து விட்டார் என சிரித்துக் கொண்டே ட்ரில் மாஸ்டரின் சின்சியாரிட்டி பற்றி சூர்யா பேசியுள்ளார்.
Recommended Video

வானில் பலூன்
நாளை படம் ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய பலூனை வானில் பறக்க விட்டுள்ளார் நடிகர் சூர்யா. எளிய மனிதர்களையும் ஏரோபிளேனில் பறக்க வைக்க வேண்டும் என்கிற சாமானிய மனிதனின் சரித்திரக் கதை நாளை திரையரங்குகளில் ரிலீசாகிறது. சூர்யா ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய தீபாவளி விருந்தாக அமையும் என்பது நிச்சயம்.


Click it and Unblock the Notifications











