ரஜினி சார்.. உங்க லெவலுக்கு என்கூட கம்பேர் பண்ணாதீங்க.. நீங்க தான் லீடர்.. அமிதாப் பச்சன் ட்வீட்!

மும்பை: தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், அமிதாப் பச்சன் உடன் மீண்டும் 33 ஆண்டுகள் கழித்து நடிக்கும் சந்தோஷத்தை சூப்பர்ஸ்டார் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் போட்ட ட்வீட்டில் என்னுடைய குருநாதர் என அமிதாப் பச்சனை ரஜினிகாந்த் புகழ்ந்திருந்தார். அதை பார்த்த அமிதாப் பச்சன் டைட்டிலே தலைவர் 170 தான். தலைவர் என்றால் லீடர், சீஃப் நீங்க தான் ரியல் தலைவர் உங்களோட என்ன கம்பேர் பண்ணலாமா? ரஜினிகாந்த் சார் என ட்வீட் போட பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்திய திரையுலகமே இவர்களோட அன்பும் மரியாதை செலுத்தும் குணத்தையும் பார்த்து ஆடிப்போயுள்ளனர்.

”You are the head, the Leader and the Chief” Amitabh Bachchan praises Rajinikanth

ரஜினிகாந்த் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வந்து இந்திய திரையுலகின் ஷாஹேன்ஷாவே நீங்க தான் அமிதாப் ஜி என கொண்டாடி வருகின்றனர்.

டபுள் சூப்பர்ஸ்டார்: பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் கோலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் தலைவர் 170 படத்தில் நடித்து வரும் நிலையில், இந்தியளவில் அந்த படத்தின் மார்க்கெட் மேலும், அதிகரிக்கும் என்றே தெரிகிறது. சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் முயற்சி செய்து வந்த நிலையில், தலைவர் 170 படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினிக்கு நோ சொல்ல முடியாது: ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில் என பிற மொழி நடிகர்கள் இணைந்து நடித்த நிலையில், தலைவர் 170 படத்தில் பகத் ஃபாசில், ராணா டகுபதி மற்றும் அமிதாப் பச்சன் என மல்டி ஸ்டார் நடித்து வருகின்றனர். ரஜினிகாந்த் கேட்டால் அமிதாப் பச்சன் முதல் மம்மூட்டி வரை யாராலும் நோ சொல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க தான் தலைவர்: இந்திய சினிமாவையே ஒரு காலத்தில் மிரட்டி எடுத்த பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிகர் ரஜினிகாந்தின் ட்வீட்டை பார்த்து விட்டு நீங்க தான் தலைவர் என்றும் படத்தின் பெயரே தலைவர் 170 தான் என்றும் தலைவர் என்றால் லீடர், சீஃப், ஹெட் என பதிவிட்ட அவர், உங்களுடன் என்னை சேர்த்து கம்பேர் பண்ணாதீங்க உங்க லெவலே வேற என பதிவிட்ட அமிதாப் பச்சன் உங்களுடன் இணைந்து பணியாற்றுவது எனக்குத் தான் பெருமை என ஒரே போடாக போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X