சர்கார் படத்தில் எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது, மியூட் செய்யப்பட்டுள்ளது?
Recommended Video

சென்னை: ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த பிறகு சர்கார் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்திற்கு ஆளுங்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சதியின் தூண்டுதலின் பேரில் விஜய் நடந்து கொள்வதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக அரசு தெரிவித்தது. அதன்படி சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

இலவசங்கள்
சர்கார் படத்தில் கோமளவள்ளி என்ற பெயர் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் கொடுத்த இலவசங்களை தீயிட்டு கொளுத்தும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தியேட்டர்களில் அந்த காட்சியை பார்க்க முடியாது. இலவசங்களை கொளுத்தும் காட்சியில் முதல் ஆளாக வந்து பொருளை தூக்கிப் போட்டவர் முருகதாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அரசியல் பற்றி பேசியதால் இந்த எதிர்ப்பா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சர்கார் படம் ஓடிய தியேட்டர்களை அதிமுகவினர் முற்றுகையிட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.

போலீஸ்
போலீசார் முருகதாஸின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அவர் அங்கு இல்லாததால் திரும்பிச் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் இதை போலீசார் மறுத்துள்ளனர். சென்சார் போர்டு சான்றிதழ் அளித்த பிறகு ஏன் இந்த கதறல் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டம்மியா?
சென்சார் போர்டு படத்தை பார்த்து சான்றிதழ் அளித்த பிறகு சில காட்சிகளை நீக்க வைத்துள்ளனர். அப்படி என்றால் சென்சார் போர்டுக்கு மதிப்பு இல்லையா, அது வெறும் டம்மியா என்று சமூக வலைதளங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











