பல பெண்களுடன் உறவு கொண்டார், அவர்கள் இன்னும் கதறுகிறார்கள்: சமந்தா ஹீரோ மீது ஸ்ரீ ரெட்டி புகார்
Recommended Video

ஹைதராபாத்: நடிகர் நானி பல பெண்களுடன் உறவு கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லீக்ஸ் புகழ் நடிகை ஸ்ரீ ரெட்டி நடிகர் நானி மீது புகார் தெரிவித்துள்ளார். நானியின் பெயரை குறிப்பிடாமல் அவரின் பட்டப் பெயரை மட்டும் போட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,

நடிப்பு
நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் நன்றாக நடிக்கிறீர்கள். திரையில் நேச்சுரலாக நடிக்கிறீர்கள்.(நானியின் பட்டப்பெயர் நேச்சுரல் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால் அது உங்களின் முகமூடி.

போராட்டம்
வாழ்க்கையில் கஷ்டப்பட்டதாக எப்பொழுதுமே கூறுகிறீர்கள். ஆனால் அது மக்களை ஃபீல் பண்ண வைக்க சொல்வது. நீங்கள் எப்பொழுதுமே மக்கள் முன்பு சூப்பராக டிராமா போடுகிறீர்கள்.

ஒழுக்கம்
பெற்றோர், தாத்தா-பாட்டியின் ஆதரவுடன் இருக்கும் பெரிய ஹீரோக்கள் உங்களை விட எவ்வளவோ மேல். அவர்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்கிறார்கள். சரண், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஈகோவே இல்லை.

வெற்றி
உங்களுக்கு தலைக்கனம் அதிகம். வளர்ந்து வரும் சிறிய இயக்குனர்களுக்கு உங்களால் மரியாதை அளிக்க முடியாது. நீங்கள் வெற்றி பெற்றுவிட்டதால் திமிர். உங்களுக்கு அண்மையில் குழந்தை பிறந்ததற்கு வாழ்தத்துக்கள்.

பாவம்
வாழ்க்கையில் ஜாக்கிரதையாக இருக்கவும். ஏன் என்றால் நீங்கள் பல பெண்களுடன் உறவு கொண்டுள்ளீர்கள். உங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் அழுது கொண்டே இருக்கிறார்கள். கடவுள் தாமதமானாலும் தண்டிப்பார். நீங்கள் கஷ்டப்படுவீர்கள் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு
ஸ்ரீ ரெட்டி கூறிய புகாரை மறுப்பாரா அல்லது அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பாரா நானி என்று திரையுலகினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











