Public Review: யூடியூப் சேனல்களுக்கு அனுமதி மறுப்பா? பப்ளிக் ரிவ்யூவில் இப்படியொரு நிலைப்பாடா?

சென்னை: கடந்த வாரம் சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆனது. படம் இதற்கு முன்னர் ரிலீஸ் ஆன சூர்யாவின் படங்களைவிட அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் கங்குவா என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் பார்த்த பலரும் படத்தின் திரைக்கதை குறித்து பலரும் நெகடிவ் விமர்சனம் கொடுத்தனர். திரைக்கதையை விட படத்தின் ஒலி அமைப்பு என்பது அதாவது பின்னணி இசை என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இப்படியான நிலையில் படத்தின் முதல்நாள் முதல் காட்சி முடிந்து வெளியே வரும் ரசிகர்களிடம் பல யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்து அதனை ஒளிபரப்புவார்கள்.

அப்படி கங்குவா படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் விமர்சனத்தினைக் கேட்டு யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பின. அதில் பல ரசிகர்கள் படக்குழுவினரை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்தனர்.

blue satta maran public review kanguva

மேலும் படக்குழுவினரை மிகவும் கேவலமான முறையில் தனிப்பட்ட தாக்குதல்களைக் கையில் எடுத்தனர். யூடியூப் சேனல்காரர்கள் இவற்றையும் ஒளிபரப்பினர். இது இணையத்தில் வேகமாக பரவியது. அதேபோல் படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்கள் படத்தினை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இப்படியான படத்தின் வசூலை பெருமளவு பாதித்துவிட்டதாக புகார்கள் எழுந்தது. இதனால் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து கண்டன அறிக்கை வெளியானது. அதேபோல் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தரப்பில் இருந்தும், படக்குழுவினர் குறிப்பிடும் யூடியூப் சேனல்களுக்கு மட்டும் முதல் நாள் முதல் காட்சி விமர்சனத்தினை பதிவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

blue satta maran public review kanguva

இந்த வாரம்: இப்படியான நிலையில் இன்று அதாவது நவம்பர் 22ஆம் தேதி எமக்குத் தொழில் ரொமான்ஸ், நிறங்கள் மூன்று, ஜாலியா ஜிம்கானா, பாரி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. பொதுவாக ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் ஆன அடுத்த வாரத்தில் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாது. ஆனால். கங்குவா படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் அதிகம் இருந்ததால், இந்த வாரம் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

blue satta maran public review kanguva

யூடியூப்: இந்நிலையில் படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்து ரசிகர்கள் வெளியே வந்தபோது பல்வேறு செய்தி நிறுவனங்கள் ரசிகர்களிடம் படம் குறித்து விமர்சனங்களைக் கேட்டு பதிவிட்டனர். அதேநேரத்தில் யூடியூப் சேனலாக மட்டும் செயல்படும் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு திரையரங்க வளாகத்திற்குள் திரையரங்க உரிமையாளர்கள் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகின்றது.

blue satta maran public review kanguva

ப்ளூ சட்டை மாறன்: இது தொடர்பாக பிரபல விமர்சகர், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " பப்ளிக் ரிவியூவிற்கு தடை என்று கூறினார்கள். ஆனால் இன்று அசோக் செல்வன் நடிப்பில் வந்துள்ள எமக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் பப்ளிக் ரிவியூ வெளியானது. ஆகவே.. பாசிடிவ் ரிவியூ மட்டும் சொல்பவர்கள், பாசிடிவ் ரிவியூ மட்டும் அப்லோட் செய்யும் சேனல்களுக்கு இந்த தடை பொருந்தாது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழ்க ஜனநாயகம்" எனப் பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

blue satta maran public review kanguva

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X