எருமசாணி, மெட்ராஸ் சென்ட்ரல் யூ-ட்யூப் பிரபலங்கள் நடிக்கும் படம் - டைட்டில் இதுதான்!

By Vignesh Selvaraj

Recommended Video

எருமசாணி, மெட்ராஸ் சென்ட்ரல் பிரபலங்கள் நடிக்கும் படம் - டைட்டில் இதுதான்!- வீடியோ

சென்னை : இப்போது தமிழ் சினிமாவிலும் ஆன்லைன் ஆதிக்கம். யூ-ட்யூப் சேனல், வெப் சீரிஸ் எனக் கலக்கும் பலர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறார்கள்.

இந்நிலையில், எரும சாணி, மெட்ராஸ் சென்ட்ரல் யூ-ட்யூப் சேனல்களைச் சேர்ந்த நடிகர்கள் இணைந்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரலில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

 காமெடி சேனல் நடிகர்கள்

காமெடி சேனல் நடிகர்கள்

யூ-ட்யூப் ரசிகர்களுக்கு எரும சாணி குழு பற்றித் தெரியும். நாட்டு நடப்புகளை காமெடி வீடியோவாக்கி அலற விட்டுக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இப்போது சினிமாவுக்கு வருகிறார்கள். எரும சாணி குழுவில் உள்ள விஜய், ஹரிஜா, விக்கி, 'மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி, சுதாகர், டெம்பிள் மங்கீஸ் ஷாரா, அகஸ்டின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

இந்த யூ-ட்யூப் சேனல்களில் உள்ளவர்கள் இணைந்து 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற படத்தை உருவாக்குகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனின் புகழ்பெற்ற வாசகம் இது. ஏற்கெனவே, இந்த வசனத்தை வைத்து 'மெட்ராஸ் சென்ட்ரல்' குழுவினர் வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 கிளாப்ப் போர்ட் நிறுவனம்

கிளாப்ப் போர்ட் நிறுவனம்

இந்தப் படத்தை கிளாப்போர்ட் நிறுவனத்தின் சார்பில் வி.சத்யமூர்த்தி தயாரிக்கிறார். ஜோஸ்வா ஜே.பெரோஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கௌசிக் ரவி இசை அமைக்கிறார். ரமேஷ் வெங்கட் இயக்குகிறார். 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படம் எடுப்பது பற்றி தயாரிப்பாளர் வி.சத்யமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

 யதார்த்தமான சந்திப்பில்

யதார்த்தமான சந்திப்பில்

'ஒரு யதார்த்தமான சந்திப்பில் பேசி முடிவெடுக்கப்பட்டது தான் 'இந்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்படம். எங்கள் திரைப்படத்தில் பணியாற்றும் எல்லாக் கலைஞர்களின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய திரைப்படமாக உருவெடுக்கும்.

 டிசம்பரில் ஆரம்பம்

டிசம்பரில் ஆரம்பம்

வருகிற டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாக இருக்கிறது. 2018-ம் ஆண்டின் கோடை விருந்தாக 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' திரைப்படம் இருக்கும்' எனத் தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் வி.சத்யமூர்த்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X