சினிமாவில் படிபடியாய் வளர்ந்து வரும் பிரபல யூடியூப்பர் அன்புதாஸன்

சென்னை : வெளியூர்களில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்த பல்லாயிரகணக்கான என்ஞினியர்களில் அன்புதாஸனும் ஒருவர் . அன்புதாஸனை நாம் 'கோலமாவு கோகிலா' படத்தில் 'எல்.கே'வாக பார்த்திருப்போம்.

அன்புதாஸன் ஒரு யூடியப்பர் ,இவர் முதன் முதலில் ஆர்.ஜே.விக்னேஷ் காந்தின் ஸ்மைல் எப்.எம் என்ற சேனலில் யூடியூப்பராக பணியாற்றினார் .ஆர்.ஜே.விக்னேஷ்காந்தின் ஸ்மைல் எப்.எம் யூடியூப் பக்கத்தை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனெனில் யூடிப்பின் ஆரம்ப காலகட்டத்தில் ஆரம்பிக்க பட்ட யூடியூப் பக்கம் அது .அதற்கு பிறகு ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஸ்மைல சேட்டை எனும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து அதில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சமூகம் சார்ந்த வீடியோக்கள் என வெளியிட்டு பிரபலமடைந்தார் .தற்போது ஆர்.ஜே.விக்னேஷ்காந்தின் குளு பிளாக் சீப் என்ற பெயரில் இயங்கி வருகிறது.ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை அன்புதாஸன் ஆர்.ஜே.விக்னேஷ் காந்துடனே பணியாற்றி வருகிறார்.

You tube fame Anbudass shines in cinema

ஸ்மைல் சேட்டையில் அன்புவுக்கும் விக்னேஷ்க்கும் இருக்கும் நகைச்சுவை கெமிஸ்ட்ரிக்கு ரசிகர்கள் ஏராளம் .அன்பு பிற யூடியூப் பக்கங்களிலும் சில வீடியோக்களில் நடித்துள்ளார் . அதில் முக்கியமாக 'ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன் ' வீடியோ பல லட்சம் மக்களால் ரசிக்கபட்டது. அதற்கு பின் ஸ்மைல் சேட்டை யூடியூப் பக்கத்தில் 'லவ் ஆல் வித் அன்பு' என்ற இணைய தொடர் ரிலீஸாகி அன்புவிற்கு என பல ரசிகர்களை இணையத்தில் உருவாக்கியது .

அதற்கு பிறகு அன்பு பல வீடியோக்களை பிளாக் சீப் இணைய பக்கத்தில் இயக்கியும் இருந்தார் .அப்போது தான் அன்புவிற்கு கோலமாவு கோகிலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .அதனை மிகச்சரியாக பயன்படுத்தி நகைச்சுவை தன்மையுடன் நடித்து ,பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார் அன்புதாஸன். இதற்கு பிறகு அன்பு பிளாக் சீப் டீமின் 'காரத்திக் வேனுகோபாலன்' இயகத்தில் உருவான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

தற்போது அன்புதாஸன் துரூவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் ஆதித்யா வர்மா படத்தில் துரூவ்வின் நண்பராக நடித்திருக்கிறார். இது இவருக்கு கிடைத்த மிக பெரிய வாய்பாகும் ,ஏனெனில் தெழுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொன்டாவின் நண்பர் கதாபாத்திரம் பலரால் பாராட்டபட்டது . இந்த ரோலில் அன்புதாஸன் நடிப்பது அவரின் சினிமா வாய்பை இன்னும் பெரியதாக ஆக்கும் .

மேலும் அன்புதாஸன் பல யூடியூப் வீடியோக்கள் ,ஆல்பம் ,குறும்படங்கள் என பலவற்றில் நடித்திருக்கிறார். யூடியூபில் அன்புதாஸன் என்று தேடினால் இவரின் பல வீடியோக்களை கண்டுகளிக்கலாம்.அவரின் இந்த யூடியூப் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது திறமையும் விடாமுயற்சியும் தான். யார் ஒருவர் இடைவிடாது கடுமையாக உழைக்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு அன்பு தாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X