'பிளாக் சீப்பின் ' இளவரசி தீப்தி இனிமேல் ஆக போகிறார் வெள்ளிதிரையின் இளவரசி
சென்னை : யூடியூப் மூலம் சினிமா உலகில் கால்பதித்து வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கும் பல யூடியூப்பர்களில் தீப்தியும் ஒருவர் . தீப்தியை நாம் அனைவரும் கைதி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாத்திருந்தோம் .
தீப்தி ஆரம்பத்தில் சில சின்ன யூடியூப் பக்கங்களில் தொகுப்பாளராக செயல்பட்டார் ,அதன் பிறகு பிரபல நாளிதலான விகடனின் யூடியூப் பக்கத்தில் தீப்திக்கு வாய்ப்பு கிடைத்தது .அதில் நிறைய பேட்டி எடுத்து வந்த தீப்திக்கு ,ஆர்.ஜே.விக்னேஷ்காந்தின் பிளாக் சீப் யூடியூப் பக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது . அதை சரியாக பயன்படுத்திய தீப்தி பல வீடியோக்களில் நடித்து இருந்தார் . பிளாக் சீப் யூடியூப் பக்கத்தில் இணைந்த கொஞ்ச நாளிலே 'பிளாக் சீப்பின் ' இளவரசி தீப்தி தான் என்று இணையத்தில் கூறும் அளவிற்கு பிரபலம் அடைந்தார்.

அதற்கு பிறகு வாய்ப்பு கிடைத்து குறும்படங்களில் தனது நடிப்பு திறனை காட்டிவந்த தீப்திக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவான 'நட்பே துணை' படத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது . அந்த படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார் தீப்தி ,தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் உள்ளது. சில நேரங்களில் கதாநாயகிக்கு சமமாக கதாநாயகியின் தோழிகளும் மக்களால் தேடி கொண்டாடபடுவார்கள். அதே போல் தீப்திக்கும் அப்படி கூடிய விரைவில் வாய்ப்புகள் தேடி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது .
அதே போல் தீப்திக்கு லோகேஷ் கனகராஜ் இயகத்தில் காரத்தி நடிப்பில் வெளிவந்த 'கைதி' படத்தில் மிக முக்கியமான வாய்ப்பு கிடைத்தது அதை மிக சரியாக பயன்படுத்தி கொண்ட தீப்தி ,அந்த கதாபாத்திரத்தில் மகிச்சிறப்பாக நடித்திருந்தார் . அதில் ஒரு காட்சியில் தீப்தியின் காதலன் இறக்க அந்த கதாபாத்திரம் படும் துன்பத்தை சரியாக நடிப்பில் கொண்டு வந்து அந்த காட்சியை பார்பவர்களின் கண்கள் கலங்க வைத்திருப்பார் .
தற்போது கைதி படத்திற்கு பிறகு பல வாய்ப்புகள் தீப்தியை தேடி வரும் என்று எதிர்பார்க்க படுகிறது . தீப்தி போல் திறமையுள்ளவரக்ளுக்கு யூடியூப் நல்ல ஏணிப்படி.


Click it and Unblock the Notifications











