எஸ்டிஆரின் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் எப்படி.. அலசும் இளம் விமர்சகர் அஷ்வின்!

சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து இளம் விமர்சகரான அஷ்வின் அலசியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியான நிலையில் அது குறித்து அலசியுள்ளார் இளம் யூடியூபரான அஷ்வின்.

மாநாடு ஷுட்டிங்

மாநாடு ஷுட்டிங்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள யூடியூப் சேனலில் தெரிவித்திருப்பதாவது, நடிகர் எஸ்டிஆர் நடிப்பில் உருவாகும் மாநாடு ஷுட்டிங் தொடங்கிய கொஞ்ச நாளிலேயே கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.அந்த கேப்பில் நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.

கேரக்டர் போஸ்டர்

ஈஸ்வரன் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் மாநாடு படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் எல்லாமே இளைஞர்கள் பற்றியே இருக்கும், கோவா, மங்காத்தா என அனைத்து படங்களும் இளைஞர்களை சுற்றியே இருக்கும்.

அரசியலை மையப்படுத்தி

அரசியலை மையப்படுத்தி

ஆகையால் சிம்புவை வைத்து இயக்கும் இந்தப்படத்தில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. அவரது படத்திற்கெல்லாம் ஒரு டேக் லைன் இருக்கும். அதே போல் இந்த படத்திற்கும் டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. மாநாடு படம் அரசியலை மையப்படுத்தி இருக்கும் என தெரிகிறது.

போராட்டத்துக்கு நடுவில்

போராட்டத்துக்கு நடுவில்

சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு நெருக்கமான நண்பர், கோவா படத்தில் கூட கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்திருப்பார். இந்தப் படத்தின் கதை காம்பிளிக்கேட்டடாக இருக்கும் என தெரிகிறது. இதில் எஸ்ஏசி, பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் போராட்டம், அடிதடிக்கு மத்தியில் எஸ்டிஆர் தொழுகை நடத்துவதாக உள்ளது.

முகத்தில் ரத்தம்

முகத்தில் ரத்தம்

படத்தின் டைட்டிலில் ஒரு எழுத்தில் ரத்தக்கறை உள்ளது. தொழுகை செய்யும் எஸ்டிஆரின் முகத்தில் ஒரு பக்கம் ரத்தம் வழிகிறது. வழக்கமான எஸ்டிஆர் படம் போன்று இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. மங்காத்தா படத்தின் போது இருந்த எதிர்பார்ப்பை போன்று இப்படத்திற்கும் உள்ளது.

வெற்றிப்படமாக அமையும்

வெற்றிப்படமாக அமையும்

இந்தப் படத்தில் எஸ்டிஆர் பெயர் அப்துல் காலிக். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மாநாடு படம் சிம்புவுக்கு நிச்சயம் ஒரு வெற்றி படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு இளம் விமர்சகரான அஷ்வின் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X