மூக்குத்தி அம்மன் படம் எப்படி? இன்ச் பை இன்ச்சாக அலசும் இளம் விமர்சகர் அஷ்வின்!

சென்னை: மூக்குத்தி அம்மன் திரைப்படம் குறித்து இளம் விமர்சகரான அஷ்வின் இன்ச் பை இச்சாக அலசியுள்ளார்.

ஆர்ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மூக்குத்தி அம்மன். நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருக்கும் இந்தப் படம் நேற்று டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸானது.

படம் முதல் நாளிலேயே பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் படத்தை பாராட்டி கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

மூக்குத்தி அம்மன்

இந்நிலையில் இளம் யூடியூப் விமர்சகரான அஷ்வின் மூக்குத்தி அம்மன் படம் குறித்த தனது விமர்சனத்தை தன்னுடைய யூடியூப் சேனலில் ஷேர் செய்துள்ளார். அவரது வீடியோவில் கூறியிருப்பதாவது, ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் ஆகியுள்ளது மூக்குத்தி அம்மன் திரைப்படம்.

கடவுள் பற்றி..

கடவுள் பற்றி..

ஆர்ஜே பாலாஜியின் டைமிங் டயலாக், ஸ்க்ரீன் பிரசன்ட்டிங் என எல்லாமே வேற லெவலில் உள்ளது. கடவுளை பற்றி மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள், மனிதரை பற்றி கடவுள் என்ன நினைக்கிறார்கள் என்பதை காமெடியாக சோஷியல் மெஸேஜுடன் சொல்லியுள்ளார்.

சிறப்பாக செய்திருக்கிறார்கள்

சிறப்பாக செய்திருக்கிறார்கள்

இயக்குநர்கள் ஆர்ஜே பாலாஜி மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து செதுக்கியிருக்கிறார்கள். நயன்தாரா நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளார். மயில்சாமி, மவுலி சார், ஊர்வசி என எல்லோருமே தங்களின் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

கடவுள் பூமிக்கு வந்தால்

கடவுள் பூமிக்கு வந்தால்

ஊர்வசி மேடம் கலக்கிட்டீங்க.. ஆர் ஜே பாலாஜியுடன் சேர்ந்து அவர் பேசும் வசனங்கள் செம. இன்றைய கால கட்டத்தில் கடவுள் பூமிக்கு வந்தால் என்ன மக்கள் மனநிலைக்கு போவோம் என்பதை நகைச்சுவையாக சொல்லியுள்ளனர். ஆர்ஜே பாலாஜிக்கு அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி குடும்பத்தோடு குல தெய்வம் கோவிலுக்கு அழைத்து செல்கிறார்.

தேவைகளை நிறைவேற்றி..

தேவைகளை நிறைவேற்றி..

அவர்கள் குடும்பத்தின் குல தெய்வம் தான் மூக்குத்தி அம்மன். அவர்கள் கோவிலுக்கு போனதை தொடர்ந்து அம்மனான நயன்தாரா, அவர்கள் வீட்டிற்கு வருகிறார். தனது வீட்டிற்கு வரும் குல தெய்வத்தை வைத்து, ஆர்ஜே பாலாஜி தன்னுடைய தேவைகளை எல்லாம் நிறைவேற்றி கொள்கிறார்.

மனசு தூய்மையாய் இருந்தால்

மனசு தூய்மையாய் இருந்தால்

போலி சாமியாரான அஜய் கோஷின் வில்லத்ததனத்தை ஆர்ஜே பாலாஜியை வைத்து தோலுரிக்கிறார் நயன்தாரா. மூக்குத்தி அம்மன் படத்தை பல சோஷியல் மெஸேஜுடன் முடித்துள்ளனர். கடவுள் என்பவர் நம் உள்ளத்தில் இருப்பவர் வெளியே தேடாதீங்க.. மனசு தூய்மையாய் இருந்தால் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பதை தெளிவாக கூறியுள்ளனர்.

விமர்சனம்..

விமர்சனம்..

எல்ஆர் ஈஸ்வரி குரலில் அம்மன் பாடல் ரசிக்கும் படியாக உள்ளது. மொத்தத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படஙததித நகைச்சுவை கலந்து கூறியுள்ளனர். இவ்வாறு மூக்குத்தி அம்மன் திரைப்படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் அஷ்வின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X