twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக்ஸ் சாட் செய்து சிக்கிய அந்த பிரபலமும் பிக்பாஸுக்கு வராராமே.. தீயாய் பரவும் தகவல்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக மேலும் ஒரு பிரபலத்தின் பெயர் அடிபட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான வேலைகளில் நிகழ்ச்சி குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

    காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!

    இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் பங்கேற்க போகும் போட்டியாளர்களிடமும் நிகழ்ச்சிக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    வெளியாகும் அப்டேட்ஸ்

    வெளியாகும் அப்டேட்ஸ்

    இதனால் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. பலரும் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் தொடர்பான தங்களுக்கு தெரிந்த அப்டேட்டுகளை கூறி வருகின்றனர்.

    பிரபலங்கள் விளக்கம்

    பிரபலங்கள் விளக்கம்

    அப்படி பரவும் தகவல்களில் தங்களின் பெயர் அடிபடும் சில பிரபலங்கள், அது எந்தளவுக்கு உண்மை என்பது குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் நகுல் பெயர் பிக்பாஸில் அடிப்பட்ட நிலையில் தான் பங்கேற்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்தார் நகுல்.

    யூட்யூப் பிரபலம்

    யூட்யூப் பிரபலம்

    இருப்பினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்களான சுனிதா, கனி, முரட்டு சிங்கிள்ஸ் இனியன், ஆர்ஜே வினோத், நடிகர் எம்எஸ் பாஸ்கர் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது யூட்யூப் பிரபலம் ஒருவரின் பெயர் அடிபட்டு வருகிறது.

    யூட்யூபர் மதன் கவுரி

    யூட்யூபர் மதன் கவுரி

    அதாவது, யூட்யூப் பிரபலமான மதன் கவுரியிடம் பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூட்யூப் பிரபலமான மதன் கவுரிக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

    செக்ஸ் சாட் சர்ச்சை

    செக்ஸ் சாட் சர்ச்சை

    தனக்கு தெரிந்த விஷயங்களையும் தான் படித்த விஷயங்களையும் சுவாரசியமாக பகிர்ந்து கொள்வதாலேயே அவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். மதன் கவுரி கடந்த 2019ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவருடன் செக்ஸ் சாட்டில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கினார்.

    பெரும் பரபரப்பு..

    பெரும் பரபரப்பு..

    மதன் கவுரியின் அரை நிர்வாண போட்டோக்களும், அவர் பேசிய ஆபாச பேச்சின் ஸ்க்ரீன் ஷாட்டுக்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அவரது பெயர் அடிபட்டு வருகிறது.

    English summary
    You Tuber Madan Gowri may participate in Biggboss tamil season 5. Biggboss Season 5 may begins in Vijay TV on Coming June it seems.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X