Kanguva: மனம் நலம் கருதி.. கங்குவா படத்தை தவிர்ப்பது நல்லது.. என்னங்க யூடியூபர் இப்படி சொல்றாரு!
சென்னை: சூர்யா - தீஷா பதானி நடிப்பில் நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. இந்தப் படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு முதல் பாகம் நேற்று ரிலீஸ் ஆனது. படத்தினை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான இந்தப் படம், எல்லா திசைகளிலும் அடிமேல் அடி வாங்கிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கங்குவா படம் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
கங்குவா படத்தினைப் பொறுத்தவரை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு, நேற்று ரிலீஸ் ஆனது. படம் மிகவும் பிரமாண்டமாக வந்துள்ளதாகவும், படம் எப்படியும் ரூபாய் 2000 கோடிகள் வரை வசூல் செய்யும் முதல் தமிழ் சினிமாவாக மாறும் எனவும் படக்குழு தரப்பில் ப்ரோமோசன் நேரங்களில் பில்டப் கொடுக்கப்பட்டது. இசை வெளியீட்டு விழாவின்போது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படத்தின் வெற்றி விழா சென்னையில் நடத்தப்படும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறினார். இதுமட்டும் இல்லாமல், கங்குவா படத்தின் முதல் பாகத்துடன் கூட மற்ற படங்கள் போட்டிக்கு வரலாம், ஆனால் இரண்டாம் பாகத்திற்கு எந்தப் படமும் போட்டிக்கு வராது என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ரசூல் பூக்குட்டி: படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை பலரும் படம் குறித்து தங்களது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்கள் என்பதை விடவும், அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்கார் வென்ற சவுண்ட் இன்ஞ்சினியர் ரசூல் பூக்குட்டி படத்தின் இசை குறித்து காட்டமான விமர்சனத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் படம் குறித்து தொடர்ந்து இணையத்தில், மீம்கள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஓவர் பில்டப்: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் குறித்தும் படக்குழு குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார். குறிப்பாக, படத்தின் இசை அமைப்பு குறித்து காட்டமாக விமர்சித்து வருகின்றார். அதேபோல் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் படக்குழு ப்ரோமோசனின்போது என்னவெல்லாம் ஓவர் பில்டப் கொடுத்தார்கள் என தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு, படக்குழுவை காட்டமாக விமர்சித்து வருகின்றார்.
மன நலம் கருதி: இந்நிலையில் பிரபல யூடியூபர் மாரிதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “ கங்குவா: ஒரு படத்த பார்க்க போய் மன அழுத்தம் ஏற்பட்டு depressed mood-க்கு தள்ளி சினிமா ரசிகர்கள் கோவமானதாக ஒரே திரைப்படம் இருக்கும்னா அது கங்குவா தான் நினைக்கிறேன். எல்லாரும் சொல்லும் முதல் விசயம் "கத்திட்டே இருக்கானுக. படமா இது" இப்படி அசிங்க அசிங்கமா ஒரு படத்த திட்டி நான் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு மன அழுத்தம் ஏற்படுத்திருக்கானக... மன நலம் கருது படத்தை தவீர்ப்பது நல்லது!” எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











