Irfan Baby Video: ஆனந்த கண்ணீரில் தேவதையை வரவேற்ற இர்ஃபான் - ஆலியா தம்பதி.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: இணையம் வளர்ந்த பின்னர் பல இளைஞர்களின் தனித் திறமைகள் வெளிவரத் தொடங்கியது. இணையத்தை சரியாகப் பயன்படுத்தி தங்களது தனித் திறமைகளை வெளிக்காட்டி, அதன் மூலம் பொருள் ஈட்டும் இளைய தலைமுறையினர் பலர் இன்றைக்கு உள்ளனர். அந்த வகையில் யூடியூபர் இர்ஃபான் தமிழ் நாட்டில் இணையத்தின் மூலம் தனது திறமையை வெளிக் கொண்டுவந்த லட்சக்கணக்கான இளைஞர்களில் ஒருவர்.

உணவை ரிவ்யூ செய்யும் வீடியோக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த யூடியூபர் இர்ஃபான் தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்த போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது பலரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

youtuber irfan irfan baby video

யூடியூபர் இர்ஃபான் தமிழ் நாட்டில் தொடங்கி பல நாடுகளுக்கு சுற்றி திரிந்து வித விதமான உணவுகளை சுவைத்து, அதன் சுவையை ரிவ்யூ செய்து தன்னுடைய youtube சேனலில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இவர் வீடியோவை பார்ப்பதற்காக மில்லியன் கணக்கில் இவருக்கு சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். இர்ஃபான் ஒரு உணவை சாப்பிடும் போது ரசித்து ருசித்து ரிவ்யூ சொல்லும் விதம் பலருக்கும் பிடித்துப்போனதால், இவர் மக்கள் மத்தியில் சீக்கிரமே ஒரு பிரபலமாக மாறினார்.

youtuber irfan irfan baby video

பிரபலமாக மாறிய பின்னர் பல அரசியல் தலைவர்கள் தொடங்கி பல சினிமா நட்சத்திரங்கள் வரை பலரையும் பேட்டி எடுத்துள்ளார். குறிப்பாக எம்.பி. கனிமொழி, தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பலரையும் பேட்டி எடுத்துள்ளார். இவர் விருந்தினருடன் ஜாலியாக உரையாடிக்கொண்டு அவர்களுடன் உணவு சாப்பிடும் வீடியோக்களுக்கு என்றைக்குமே மக்கள் மத்தியில் தனி வரவேற்புதான்.

youtuber irfan irfan baby video

நடிகர் நெப்போலியனுடன் நெருங்கிப் பழகி வரும் இவர், அமெரிக்காவில் நெப்போலியன் வைத்துள்ள பண்ணை, வீடு என அனைத்து இடங்களிலும் சுற்றிப் பார்த்து அதனைப் வீடியோவாக தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார். கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட இர்ஃபான் தனது திருமணத்திற்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் தொடங்கி, சக யூடியூபர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரையும் அழைத்திருந்தார். இதுமட்டும் இல்லாமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியையும் தனது திருமணத்திற்கு அழைத்திருந்தார்.

youtuber irfan irfan baby video

சர்ச்சை: கடந்த ஆண்டு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர் ஆலியா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. அன்றைய தினத்தில் தனக்கு பெண் குழந்தை பிறக்கப்போவதாக இர்ஃபான் அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இதுமட்டும் இல்லாமல் இர்ஃபான் சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டதாக பலரும் விமர்சித்தனர். ஆனால் தான் தெரியாமல் செய்துவிட்டதாகவும், பெண் குழந்தை பெற்றுக் கொள்வதில் தான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

youtuber irfan irfan baby video

குழந்தை: இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் நேற்று குழந்தையுடன் தானும் தனது மனைவி ஆலியாவும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் குழந்தை ஆலியாவைப்போல் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் ஆலியா குழந்தையைப் பெற்றொடுத்தபோது, எடுத்த வீடியோவை இர்ஃபான் தற்போது பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் வலி தாங்க முடியாமல் ஆலியா அழுவதும், ஆலியாவுக்கு நான் உன்னோடு தான் இருக்கின்றேன் என தனது அன்பை வெளிப்படுத்த இர்ஃபான் கொடுக்கும் முத்தமும் என வீடியோவே ஒரு காதல் படம் போல் உள்ளது.

youtuber irfan irfan baby video

தாய்மை: மேலும், குழந்தை பிறந்தபோது இர்ஃபான் அழுவதும், குழந்தையின் முகத்தை தாய் ஆலியா முதன் முதலாப் பார்க்கும்போது நெகிழ்ந்து போவதையும் பார்க்கும்போது, அழகு. குழந்தையை இர்ஃபான் கையில் வாங்கிக் கொள்ளும்போது குழந்தை தனது அப்பா இர்ஃபானை மெல்ல கண் திறந்து பார்ப்பதும், தனது குழந்தையை எடுத்துக் கொண்டு மனைவியிடம் இர்ஃபான் செல்வதெல்லாம், கவிதை எனக் கூறும் அளவிற்கு அந்த வீடியோ உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X