Jyotika: மேடம் உங்களுக்குத்தான்.. ஆத்துக்காரருக்காக ஆத்திரப்பட்ட ஜோ.. லெஃப்ட் ரைட் வாங்கிய ராஜ்மோகன்
சென்னை: கங்குவா படம் ரிலீஸ் ஆனதும்தான் ஆனது, ஒட்டுமொத்த திரையுலகமும் கங்குவா படம் குறித்து அக்குவேர் ஆணிவேராக பிரித்துக் கொண்டு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஒரு சில விமர்சகர்கள் தொடங்கி பெரும்பாலான ரசிகர்கள் வரை படத்தை வறுத்து எடுத்துவிட்டார்கள். இதனால் 2024ஆம் ஆண்டில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படம் என கங்குவா மாறியுள்ளது. கங்குவாவை பலரும் வெளுத்து வந்த நிலையில் தனுஷ்க்கு நயன் எழுதிய கடிதம் ஒட்டுமொத்தமாக கவனத்தினை ஈர்த்தது. இதனால், அடிமேல் அடிவாங்கிக் கொண்டு இருந்த கங்குவாவுக்கு ரிலாக்ஸ்ஷேசன் ப்ரீயர்ட்டாக அது அமைந்தது.
இப்படியான நிலையில்தான் கங்குவா படம் குறித்து, படக்குழு குறித்தும் படத்தின் விமர்சனங்கள் குறித்தும், நடிகையும் கங்குவா படத்தின் நாயகனான சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதிய பதிவு கங்குவா படத்தினை மீண்டும் ட்ரோல் செய்யக் காரணமாக மாறிவிட்டது. குறிப்பாக பல விமர்சகர்கள் தொடங்கி, மீம் கிரியேட்டர்கள், பல யூடியூப் சேனல்கள் என பலவற்றிக்கும் ஜோதிகா தானகவந்து கன்டன்ட் கொடுக்க பலரும், கங்குவாவை புரட்டி எடுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் ஜோதிகாவின் நீளமான மற்றும் ஆதங்கமான இன்ஸ்டாகிராம் பதிவுக்கு பிரபல யூடியூபரும் நடிகருமான ராஜ்மோகன் பதில் அளித்துள்ளார். இது பலரது கவனத்தினைக் கவர்ந்துள்ளது.

அதாவது ஜோதிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக ராஜ் மோகன் 15 நிமிடங்களுக்கு பேசியுள்ளார். அதில் குறிப்பாக "ஜோதிகா தனது பதிவில் குறிப்பிட்ட, பெண்கள் பின்னால் அலையும் கதாநாயகர்கள், இரட்டை அர்த்த வசனம் உள்ள படங்கள், நம்பவே முடியாத சண்டைக் காட்சிகளைக் கொண்ட படங்கள் என பல படங்கள் வந்துள்ளது. அந்தப் படங்கள் எல்லாம் கங்குவா அளவிற்கு விமர்சிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் சொல்லக்கூடிய இந்த மூன்று பிரச்னைகளும் கங்குவாவில் இல்லை?

இரட்டை அர்த்த வசனங்கள்: கங்குவா படத்தில் வரக்கூடிய கதாநாயகி கதாபாத்திரத்தினை என்ன செய்தார்கள்? கதாநாயகி கதாபாத்திரத்தினை சூர்யா மட்டும் இல்லாமல் யோகிபாபு கதாபாத்திரமும் ப்ரேக்கிங் என்றால் நான் கரெக்ட் செய்து கொள்ளலாம் எனப் பார்த்தேன் என இருக்கும். இது ஸ்டாகிங்கில் வராதா? இரட்டை அர்த்த வசனங்கள் முதல் அரைமணிநேரத்தில் இல்லவே இல்லையா? முதல் அரைமணி நேரத்தில் பாடல்கள் இல்லவே இல்லையா?

யாரு எடுப்பா?: நம்பவே முடியாத ஆக்ஷன் காட்சிகள் மற்றப் படங்களில் இருப்பதாக ஜோதிகா சுட்டிக் காட்டுகின்றார். விமானத்தில் ஃபுட்போர்டு அடிக்கும்படியான க்ளைமேக்ஸினை 2024ஆம் ஆண்டு யாருங்க எடுப்பா? கங்குவா படத்தின் க்ளைமேக்ஸில், டேக் ஆஃப் ஆன கார்கோ விமானத்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் ஃபுட்போர்டு அடிக்கும்படியான சண்டைக் காட்சி நம்பத்தகுந்த சண்டைக் காட்சியா?

லெஃப்ட் ரைட்: நடுத்தர ரசிகர்கள்கூட இதுபோன்ற காட்சிகள் ஹாலிவுட் படத்தில் வந்தால் நம்பமாட்டார்கள். காரணம் காலம் மாறிவிட்டது? மக்களின் ரசனை மாறிவிட்டது. படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை எனக் கூறுகின்றார்கள். அவ்வளவுதான். மக்களின் ரசனைக்கு ஏற்றவகையில் படம் எடுக்கவேண்டுமே தவிர, மக்களை குறை சொல்லிக் கொண்டு இருக்ககூடாது" என பேசியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஆத்துக்காரருக்காக ஆத்திரப்பட்ட ஜோதிகாவை ராஜ்மோகன் லெஃப்ட் ரைட் வாங்கியுள்ளார் என பேசி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











