பிரதமர் பதவிக்கு ஏற்றவரை கடவுள் முடிவு செய்வார்: மோடியுடன் நின்றபடி சல்மான் கான் பேட்டி
அகமதாபாத்: பிரதமர் பதவிக்கு ஏற்ற சிறந்த மனிதரை கடவுள் முடிவு செய்வார் என்று நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். மக்களை மோடிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்ட சல்மான் கான், நான் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு தான் வாக்களிப்பேன் என்றார்.
குஜராத்தில் பட்டம் விடும் பண்டிகை நடைபெற்றது. இதில் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து பட்டம் விட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சல்மான் கூறுகையில்,
நாட்டுக்கு ஏற்ற சிறந்த மனிதர் யார் என்பதை கடவுள் முடிவு செய்வார்.
அந்த சிறந்த மனிதர் வெற்றி பெறட்டும். நமக்கும், நாட்டுக்கும் சிறந்த மனிதராக இருப்பவர் தான் பிரதமர் ஆக வேண்டும். மோடி அரசியலில் நல்ல மனிதர். நாடு மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மோடியால் உழைக்க முடியும் என்பதால் எனக்கு அவரை பிடிக்கும்.
மோடி சிறந்த மனிதர் என்று நீங்கள் நினைத்தால் அவருக்கு வாக்களியுங்கள். நான் அவரை இன்று தான் முதல் முறையாக சந்தித்தேன். இனி அவரை அடிக்கடி சந்திப்பேன் என்று நம்புகிறேன். குஜராத் போன்ற முன்னேற்றத்தை நான் வேறு எங்கும் பார்க்கவில்லை.
நான் மும்பைக்காரன். என் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. பிரியா தத் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாபா சித்திக்கி ஆகியோர் சிறந்த மனிதர்கள். அவர்களுக்கே எனது ஓட்டு என்றார்.
பிரதமர் வேட்பாளர் பற்றி சல்மானிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் கூறுகையில், நான் ஒரு நடிகன். எனக்கு அரசியல் பற்றி அவ்வளவாக தெரியாது என்றார்.


Click it and Unblock the Notifications











