twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உன் அனைத்து வேதனைகளுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன்.. நடிகர் சுஷாந்த் சிங் சகோதரி உருக்கம்!

    By
    |

    மும்பை: உன் அனைத்து வேதனைகளுக்காகவும் வலிகளுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன் என்று மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் சகோதரி தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Sushant Singh Rajput -ஐ நினைத்து வாடும் செல்லப் பிராணி | Fudge

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இது பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

    தெய்வங்கள்எல்லாம் தோற்றே போகும் தந்தையின்அன்பின் முன்னே.. கோலிவுட்டின் டாப் 5 அன்பான அப்பாக்கள்!தெய்வங்கள்எல்லாம் தோற்றே போகும் தந்தையின்அன்பின் முன்னே.. கோலிவுட்டின் டாப் 5 அன்பான அப்பாக்கள்!

    மருந்து, மாத்திரை

    மருந்து, மாத்திரை

    மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது மன அழுத்தத்துக்காக அவர் பயன்படுத்திய மருந்துகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    நீயொரு போராளி

    நீயொரு போராளி

    இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்த வந்துள்ள, சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கிர்த்தி, சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் தனது சகோதரர் பற்றி உருக்கமாகக் கூறியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: 'நீ மிகுந்த வேதனையில் இருந்தது எனக்குத் தெரியும். நீயொரு போராளி என்பதும் கடுமையாக போராடிக் கொண்டிருந்தாய் என்றும் தெரியும்.

    எனது மகிழ்ச்சியை

    எனது மகிழ்ச்சியை

    மன்னித்துக்கொள் என் தங்கமே.. உன் அனைத்து வலிகளுக்காகவும் வேதனைகளுக்காகவும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னால் முடிந்தால், உனது அனைத்து வேதனைகளையும் எடுத்துக்கொண்டு எனது மகிழ்ச்சியை உனக்கு வழங்கி இருப்பேன். உனது மின்னும் கண்கள், இந்த உலகுக்கு எப்படி கனவு காணவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தது.

    நேசிக்கிறார்கள்

    நேசிக்கிறார்கள்

    உன் அப்பாவித்தனமானப் புன்னகை, உன் இதயத்தின் தூய்மையை வெளிப்படுத்தியது. நீ எப்போதும் நேசிக்கப்படுவாய். உன்னை எல்லோரும் நேசித்தார்கள். நேசிக்கிறார்கள். நிபந்தனையின்றி நேசிப்பார்கள். அன்பானவர்களே, இது சோதனை காலம் என்பது தெரியும். வாய்ப்பு கிடைக்கும்போது வெறுப்பை விட்டுவிட்டு அன்பை தேர்வு செய்யுங்கள்.

    கருணை இரக்கம்

    கருணை இரக்கம்

    கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் மேலாகக் கருணையையும் இரக்கத்தையும் தேர்வு செய்யுங்கள். சுயநலத்துக்கு மேலாக தன்னலமற்றத் தன்மையை தேர்ந்தெடுத்து மன்னியுங்கள். உங்களை, மற்றவர்களை, எல்லோரையும் மன்னியுங்கள். எல்லோரும் அவரவர்களுக்கான பிரச்னைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் கருணை காட்டுங்கள். எந்தச் சூழலிலும் உங்கள் இதயத்தை மட்டும் மூடிவிடாதீர்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    You were a fighter.. Sushant Singh Rajput's sister pens open letter to him
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X