27 வயதில் வாரிசு நடிகர் மரணம்: திரையுலகினர் இரங்கல்
பெங்களூரு: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கன்னட நடிகர் ராகேஷ் உயிர் இழந்தார்.
கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஆஷா ராணி. அவரின் மகன் ராகேஷ். செலுவினா சித்தாரா கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

வளர்ந்த பிறகு ராகேஷ் 40க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். 27 வயதான ராகேஷுக்கு காங்க்ரீன் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்தார். இந்நிலையில் அண்மையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள புனித ஜான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிர் இழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்து கன்னட திரையுலகினர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications