கவர்ச்சி போட்டோ அனுப்பியும் வாய்ப்பு இல்லையே: புலம்பும் இளம் நடிகை
சென்னை: இளம் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இயக்குநர்களுக்கு அனுப்பி வைத்தும் பலனில்லையாம்.
முதல் படத்திலேயே யாருய்யா இந்த பொண்ணு என்று அனைவரையும் கேட்க வைத்தவர் அந்த நடிகை. அனைவரும் வியக்கும் அளவுக்கு முதல் படத்திலேயே அருமையாக நடித்திருந்தார்.

அழகும், திறமையும் இருக்கிறது, இந்த பொண்ணு கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாவம் பட வாய்ப்புகளை பெற திணறிக் கொண்டிருக்கிறார்.
சரி கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அனுப்பி வைத்தாராம். பாவம், அப்படியும் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லையாம்.
மார்க்கெட் இல்லாத சில நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பை பெற்றதை பார்த்து தான் அவரும் அப்படி செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஒர்க்அவுட் ஆகவில்லை.
என்ன செய்தாலும் பட வாய்ப்பு இல்லையே என்று கவலையில் உள்ளாராம் நடிகை.


Click it and Unblock the Notifications











