Don't Miss!
- News
உயரப் போகுது விலை! தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் இறக்குமதிக்கு வரி அதிகரிப்பு
- Finance
7 லட்சம் வரையில் ஜீரோ வருமான வரி.. முழு விபரம்..! யாருக்கெல்லாம் நன்மை..!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
த்ரிஷா எதுக்கு நான் இருக்கேன்...இளம் நடிகை வெளியிட்ட வீடியோ
சென்னை : கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் ஹீரோயினாக இருந்து வருபவர் நடிகை த்ரிஷா. தற்போது ராங்கி, சுகர், ராம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.
சிங்கம்பட்டி ஜமீன் வாரிசிடம் சாரி கேட்ட சார்பட்டா பரம்பரை: 4 ஆண்டுகளுக்கு பின் முடிந்த ஆர்யா வழக்கு!
த்ரிஷா நடித்த படங்களின் கேரக்டர்களில் கவுதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படம் மறக்க முடியாதது. அந்த படத்தில் சிம்புவிற்கும், த்ரிஷாவிற்கும் இடையேயான ரொமான்டிக் காட்சிகளை, 11 ஆண்டுகள் கடந்த பிறகும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மற்றொரு பிளஸ்.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசிய கவுதம் மேனன்
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கச் சொல்லி ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கவுதம் மேனனும் 2020 ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் இது பற்றி ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசி உள்ளார்.

இறுதியாகிறது விடிவி 2
விண்ணை தாண்டி வருவாயா படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படத்தை சிம்பு, த்ரிஷா, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளார்.

இளம் நடிகை வெளியிட்ட வீடியோ
இதனால் விண்ணை தாண்டி வருவாயா 2 படம், மீண்டும் அதே கூட்டணியில் உருவாக உள்ளது இறுதியானது. இந்நிலையில் இந்த படத்தை தயாரிப்பவர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காக, இளம் நடிகை ஒருவர் ஹீரோயின் கேரக்டரில் த்ரிஷாவிற்கு பதில் தன்னை நடிக்க வைக்கும்படி மறைமுகமாக கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
If ever VTV part 2 happens , you know who to call 😆 pic.twitter.com/G8uzNxK1T8
— Reba Monica John (Reba_Monica) April 18, 2021
த்ரிஷா உடையில் ரிபா
அந்த இளம் நடிகை வேறு யாரும் இல்லை. பிகில் படத்தில் நடித்த ரிபா மோனிகா ஜான் தான். அந்த வீடியோவில் ரிபா, விண்ணை தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா அணிந்திருந்த புகழ்பெற்ற நீல நிற புடவை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து காட்சி அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

த்ரிஷாவிற்கு பதில் நான்
அத்துடன், ஒருவேளை விண்ணை தாண்டி வருவாயா 2 படம் உருவானால் உங்களுக்கு தெரியும் யாரை கூப்பிடுவார்கள் என்று, என்கிற கேப்ஷனுடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் ரிபா பதிவிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

குட்டி பட்டாஸ் நடிகையின் குறும்பு
குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்து, சமீபத்தில் வெளியாகி, இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஹிட் வீடியோவான குட்டி பட்டாஸ் வீடியோ பாடலில் ரிபா நடித்திருந்தார். சில மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.