குன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்

By Siva

Recommended Video

சென்னையில் நடிகையை பூட்டி வைத்து பலாத்காரம் செய்த 3 பேர்- வீடியோ

சென்னை: பட வாய்ப்பு தருவதாக அழைத்துச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்து 3 ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை ஒருவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த 23 வயது நடிகை ஒருவருக்கு குமார் என்பவர் போன் செய்து தான் ஒரு தயாரிப்பாளர் என்றும், பட வாய்ப்பு குறித்து பேச நேரில் வருமாறும் அழைத்துள்ளார்.

போரூரில் உள்ள ஒரு இடத்திற்கு வருமாறு குமார் கூற அந்த நடிகையும் சென்றுள்ளார்.

2 ஆண்கள்

2 ஆண்கள்

குமார் சொன்ன இடத்திற்கு சென்ற அந்த நடிகையிடம் பைக்கில் வந்த இருவர் பேசியுள்ளனர். குமார் தங்களை அனுப்பி வைத்ததாகவும் அவரை குன்றத்தூருக்கு அழைத்து வரச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர்.

நடிகை

நடிகை

ஒரு வாடகை டாக்சியை பிடித்து அதில் நடிகையுடன் ஒருவர் செல்ல மற்றொருவர் பைக்கில் பின் தொடர்ந்துள்ளார். குன்றத்தூரை அடைந்ததும் நடிகையை ஒரு வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர்.

பலாத்காரம்

பலாத்காரம்

அந்த வீட்டில் வைத்து 3 ஆண்கள் கத்திமுனையில் அந்த நடிகையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த கொடூரத்தை அவர்கள் தங்களின் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.

புகார்

புகார்

போலீசில் புகார் அளித்தால் பலாத்கார வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று அந்த 3 பேரும் மிரட்டியுள்ளனர். நடிகை அணிந்திருந்த ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள தங்க செயின், ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு டாக்சி பிடித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

தேடல்

தேடல்

நடிகை நேராக காவல் நிலையத்திற்கு சென்று அந்த 3 பேர் மீதும் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த தகவலை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X