PS2: இளம் வயது ஆதித்த கரிகாலனாக நடித்தது யாரு தெரியுமா? நந்தினி பற்றி என்ன சொல்றாரு பாருங்க!

சென்னை: பொன்னியின் செல்வன் 2 வார நாட்களில் சற்றே வசூலில் தொய்வடைந்த நிலையில், 2ம் வார இறுதியிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் படம் பட்டையை கிளப்பி வருகிறது.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் பற்றி பலருக்கும் தெரிந்துள்ள நிலையில், இளம் நடிகர்கள் பற்றிய தேடலில் ரசிகர்கள் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர்.

Young Aditha Karikalan actor Nejamavey Santhosh talks about Sara Arjun and his PS2 experience

இளம் நந்தினியாக தெய்வத்திருமகள் சாரா அர்ஜுன் நடித்த நிலையில், குட்டிக் குந்தவையாக சின்னத்திரை நடிகை கன்யா பாரதியின் மகள் நிலா நடித்திருந்தார். இந்நிலையில், இளம் வயது ஆதித்த கரிகாலனாக நடித்த நெஜமாவே சந்தோஷ் அளித்த பேட்டி ஒன்று ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

300 கோடியை நெருங்கிய பொன்னியின் செல்வன் 2: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இந்த வார முடிவில் 300 கோடி வசூலை தாண்டுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் 4 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்திய அந்த படத்தின் வசூல் வார நாட்களில் சொல்லிக் கொள்ளும்படி இல்லாமல் பெரிய சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Young Aditha Karikalan actor Nejamavey Santhosh talks about Sara Arjun and his PS2 experience

நந்தினியாக சாரா அர்ஜுன்: தெய்வத்திருமகள் படத்தில் சியான் விக்ரமின் குழந்தை நிலா பாப்பாவாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன் பொன்னியின் செல்வன் படத்தில் பருவ வயது நந்தினியாக நடித்து தனது அழகால் ரசிகர்களை மயக்கி விடுகிறார்.

இளம் நந்தினியாக சாரா அர்ஜுன் மீது ஏகப்பட்ட இளைஞர்கள் காதல் வசப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடித்த இளம் வயது ஆதித்த கரிகாலன் சமீபத்திய பேட்டியில் சாரா அர்ஜுன் பற்றி பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

ஆதித்த கரிகாலனாக 'நிஜமாவே சந்தோஷ்': டிக் டாக் பிரபலமான நிஜமாவே சந்தோஷ் மாடலிங்கில் ஆர்வம் செலுத்தி வந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஆடிஷனுக்கு சென்றுள்ளார்.

கட்டுக்கோப்பான உடலமைப்பையும், நீண்ட முடியையும் வளர்த்து வைத்திருந்த சந்தோஷை பார்த்த இயக்குநர் மணிரத்னம் ஆரம்பத்திலேயே அவரை அந்த இளம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்து விட்டாராம்.

சாரா அர்ஜுனை பார்த்ததும் ஷாக்: இவர் தான் இளம் வயது நந்தினியாக உனக்கு ஜோடியாக நடிக்கப் போறாங்கன்னு சொன்னதும் அவரை பார்த்ததும் அந்த தெய்வத் திருமகள் படத்தில் சாரா பாப்பாவாக நடித்த பெண்ணா என சந்தேகத்துடன் கேட்டேன். அதற்கு ஆமாம் என உதவி இயக்குநர்கள் கூறினர்.

Young Aditha Karikalan actor Nejamavey Santhosh talks about Sara Arjun and his PS2 experience

வீட்டுக்குப் போய் என் அம்மாகிட்ட அம்மா தெய்வத்திருமகள் படத்தில் எவ்ளோ குட்டியா இருந்துச்சு அந்தப் பொண்ணு அது இப்போ பெருசா வளர்ந்துடுச்சும்மா அதுதான் எனக்கு இந்த படத்தில் ஜோடின்னு சொன்னேன் என தனது சந்தோஷத்தை நடிகர் நெஜமாவே சந்தோஷ் வெளிப்படுத்தி உள்ளார்.

பட வாய்ப்புகள் வருகிறது: இளம் வயது ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வன் 2வில் நடித்த நெஜமாவே சந்தோஷுக்கு தற்போது சில பட வாய்ப்புகள் வந்திருக்கிறதாம். சீக்கிரமே நல்ல கதையை தேர்வு செய்து நடிக்கப் போவதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X