ஆதி அண்ணாவை பார்க்கணும்.. கதறி அழுத மாணவி.. அவரை போல் ஆகணுமாம்.. PT சாருக்கு இப்படியொரு ரசிகையா?

சென்னை: ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் பிடி சார் திரைப்படம் இந்த வாரம் வெளியானது. ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் ரசிகர்களை கவராத நிலையில், இந்த வாரம் வெளியான பிடி சார் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது.

நடிகர் ஆதி திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படத்தை தொடர்ந்து புரமோட் செய்து வருகிறார். பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் பணியாற்றி வந்த கார்த்திக் வேணுகோபாலன் ரியோ ராஜை வைத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக பிடி சார் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Young College Girl cried and told she want to see Hip Hop Aadhi video shocks fans

அந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து வருகிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஹிப் ஹாப் ஆதியை பார்க்கணும் என அழும் காட்சிகள் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

ஆம்பள: "கிளப்புல மப்புல" என பெண்களை ட்ரோல் செய்து பாட்டு போட்டு ஹிட் அடித்த ஹிப் ஹாப் ஆதி சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான ஆம்பள படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆம்பள படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட் அடித்த நிலையில், அரண்மனை 2, தனி ஒருவன் என பல படங்களுக்கு சூப்பராக மியூசிக் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

மீசையை முறுக்கு: விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ் வரிசையில் ஹிப் ஹாப் ஆதியும் இசையமைப்பாளரில் இருந்து ஹீரோவாக மாறியுள்ளார். மீசையை முறுக்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி அனைத்து யூடியூபர்களையும் அந்த படத்தில் நடிக்க வைத்து ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்ந்தார். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் ஆதி நடித்து வரும் நிலையில், பெரிதாக எந்த படமும் ஓடவில்லை. இந்த வாரம் பிடி சார் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

பிடி சார்: கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் இந்த வாரம் வெளியான பிடி சார் திரைப்படம் திரையரங்குகளில் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என தியேட்டர்களுக்கு சென்று புரமோட் செய்து வருகிறார் ஆதி. இந்நிலையில், கோவையில் அவரை பார்த்த நிலையில், அவருடன் நின்று போட்டோ எடுக்க முடியவில்லை என கல்லூரி மாணவி கதறி அழுத காட்சிகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஆதி அண்ணாவ பார்க்கணும்: சிறு வயதில் இருந்தே ஆதி அண்ணா மீது ரொம்பவே விருப்பமுடன் இருப்பதாகவும் அவரை போலவே ஆக வேண்டும் என்பது தான் ஆசை என அந்த கல்லூரி மாணவி கூறியுள்ளார். ஆதி அண்ணாவை பார்த்ததும் பேசக் கூட முடியாமல் நின்று விட்டேன் என்றும் அவருடன் போட்டோ கூட எடுக்க முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளில் பாடல்களை பாடி வருகிறேன். அவரை போலவே ஆகத்தான் ஆசை என அந்த இளம் பெண் கதறி அழும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இளம் பெண்கள் மனதை ஹிப் ஹாப் ஆதி இந்த அளவுக்கு கொள்ளை கொண்டு வைத்திருக்கிறாரே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இளம் பெண்கள் இப்படி சினிமா மோகத்தில் மூழ்கி கிடப்பது தவறான விஷயம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X