Just In
- 2 hrs ago
அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவிட்டல் ரசிகர்கள் ஷாக்!
- 2 hrs ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
- 2 hrs ago
எனக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க!
- 2 hrs ago
தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்!
Don't Miss!
- Sports
32 ஆண்டுகளில் 3வது முறை... சொதப்பிய ஆஸ்திரேலியா... சாதித்த இந்திய இளம் வீரர்கள்!
- News
விமானம் தரையிறங்கும் நேரத்தில் ஓடுபாதையில் போதையில் காரை ஓட்டி சென்ற நபர்.. வைரல் வீடியோ!
- Finance
வரி சலுகைக்காக டெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..?!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Lifestyle
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாளமீன் பாடலில் நடித்த இளம் காமெடியன் முத்துராஜா மரணம்!

அதில் கானா பாட்டுப் பாடும் உலகநாதனுக்குப் பிறகு, அத்தனைப் பேர் கவனத்தையும் கவர்ந்தவர் உலகநாதனுக்கு மைக் பிடித்தபடி திறந்த விழி மூடாமல் வரும் இளைஞன். பெயர் முத்துராஜா. அந்தப் படத்துக்குப் பிறகு மள மளவென எக்கச்சக்க படங்களில் சிரிப்பு மூட்டிய அந்த இளம் நகைச்சுவை நடிகர் நேற்று இரவு மரணமடைந்துவிட்டார்.
களவாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த முத்துராஜாவுக்கு கடந்த மாதம்தான் தேனி கேகே பட்டியில் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து, மனைவியுடன் கே.கே. பட்டியில் தங்கி இருந்தார். இரு தினங்களுக்கு முன் வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.
அவரது இறுதிச் சடங்கு இன்று சொந்த ஊரில் நடக்கிறது.