விஜய்தான் எல்லாமே.. லியோ முதல் நாள் முதல் காட்சியில் காதல் ஜோடிக்கு நடந்த நிச்சயதார்த்தம்

புதுக்கோட்டை: Leo (லியோ) லியோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் தனது காதலிக்கு தியேட்டரில் வைத்தே மோதிரம் அணிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 900 ஸ்க்ரீன்களில் படம் ரிலீஸாகியிருப்பதாக கூறப்படுகிறது. லியோ ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடிவருகின்றனர்.

Young Couple Got Engaged in Leo First Day First Show At Pudukkottai

முதல் நாள் முதல் காட்சி: சிறப்பு காட்சியாக 7 மணிக்கு எப்படியாவது படத்தை திரையிட பட தயாரிப்பு தரப்பு எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைக்காததால் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. 9 மணிக்குதான் காட்சி என்றால் அதற்கு முன்னதாகவே தியேட்டர் வாசலில் ரசிகர்கள் குழும ஆரம்பித்தனர். பட்டாசு வெடித்து ரகளையாக கொண்டாடிவிட்டு தியேட்டருக்குள் சென்றனர் ரசிகர்கள்.

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்: முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் தங்களுக்கு பரம திருப்தியை தந்திருப்பதாகவும் லோகேஷ் கனகராஜின் மேக்கிங் விஜய்யின் நடிப்பு அன்பறிவ் மாஸ்டர்ஸின் சண்டை காட்சி என அனைத்துமே அட்டகாசமாக இருப்பதாக பூரிக்கின்றனர். அதுமட்டுமின்றி படத்தின் லொக்கேஷன் பெரிய ப்ளஸ் எனவும் கூறுகின்றனர்.

எல்சியூ: அதேபோல் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பில் உச்சக்கட்டமாக இருந்தது இப்படம் எல்சியூவில் வருமா என்பதுதான். ரிலீஸ்வரை அதுகுறித்து லோகேஷ் கனகராஜ் எந்த ஹிண்ட்டும் கொடுக்காமல் ரகசியம் காத்தார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இந்தப் படமும் எல்சியூவில் வந்திருக்கிறது. இதுவும் ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

நிச்சயதார்த்தம்: விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் பொதுவான ரசிகர்கள் படத்துக்கு கலவையான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். இந்நிலையில் லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சியின்போது புதுக்கோட்டையில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது புதுக்கோட்டை விஜய் தியேட்டரில் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் முன்னிலையில் திரையரங்கில் வைத்தே கிறிஸ்தவ முறைப்படி தனது காதலிக்கு மோதிரம் மாட்டி நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

தனக்கு அப்பா, அம்மா இல்லை. விஜய்தான் எல்லாமே என்பதால் அவர் படத்தில் வைத்து இந்த நிச்சயதார்த்தத்தை செய்துகொண்டதாக அவர் தெரிவித்தார். திரையரங்கில் வைத்து நிச்சயதார்த்தம் செய்துகொண்ட அவர்களுக்கு படம் பார்க்க வந்த ரசிகர்கள் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X