யாரும்மா நீ நானிக்கே நாக்கவுட் கொடுப்ப போல.. 'ஆயா ஷெர்’ பாட்டுக்கு தாறுமாறு டான்ஸ் போட்ட பெண்!

ஹைதரபாத்: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான தேவரா படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் அனிருத் அடியெடுத்து வைத்த நிலையில், அடுத்து நானி 'ஓட்டேரி நரி' போல குடுமிப் போட்டுக்கொண்டு நடித்து வரும் 'தி பாரடைஸ்' படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

அவரது இசையில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'ஆயா ஷெர்' ஒரே நாளில் 25 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இப்போதைக்கு இந்த பாடல் தான் அடிபொலி டிரெண்டாகி வருகிறது.

Young girl dance reels for Nani s Aaya Sher song goes viral
Photo Credit:

ஒரு காலத்தில் விஜய், சிம்பு எல்லாம் கஷ்டப்பட்டு ஸ்டெப் போட்டு ஆடிக்கொண்டிருந்ததை போல தற்போது நானி இந்த பாடலுக்காக நாக்குத் தள்ளும் அளவுக்கு கஷ்டப்பட்டு நடனமாடிய நிலையில், அதை அசால்ட்டாக ஒரு இளம் பெண் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் நானி: தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களிலேயே அதிக கவனத்தை நடிகர் நானி செலுத்தி வருகிறார். ஆரம்பத்தில் ரொமான்டிக் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நானி தசரா, சரிபோதா சனிவார், ஹிட் 3 என வரிசையாக ஆக்‌ஷன் அவதாரத்தை எடுத்து வரும் நிலையில், அடுத்த படத்தில் அதைவிட மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் அறிமுக டீசரில் வரும் ஆபாச வசனங்கள் காரணமாக பெரிய சர்ச்சையை கிளப்பிய தி பாரடைஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அனிருத் இசையில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

நானிக்கே நாக்கவுட்: அண்டா பிரியாணியை ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பார்த்திபன் கறி சோறு எடுத்து வருவது போல எடுத்து வந்து பசியால் வாடும் தனது மக்களுக்கு கொடுத்து சிங்கம் போல கர்ஜித்து ஆயா ஷெர் என டான்ஸ் போட்டுள்ளார். அந்த பாடல் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் நிலையில், ஏகப்பட்ட பிரபலங்கள் அதே போல ஆட முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், இளம் பெண் ஒருவர் கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் அணிந்துக் கொண்டு நானியை போலவே ஆட்டம் போட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் அவரது ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X