Vijay - விஜய் வீட்டு வாசலில் கை எடுத்து கும்பிட்டு கதறி அழுத இளம்பெண்.. இது என்ன புது கதையா இருக்கு?
சென்னை: Vijay (விஜய்) விஜய் வீட்டு வாசலில் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அழுதபடி நிற்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அந்த வீடியோ கோலிவுட்டில் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கிறார். தந்தையின் துணையோடு சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது திறமையின் துணையோடு இப்போது முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார். மேலும் மிகப்பெரிய வியாபாரம் அவரது படங்களுக்கு நடக்கிறது. இதனால் அவரை நம்பி எவ்வளவு கோடி ரூபாய் வேண்டுமானாலும் பணத்தை செலவழிக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் லியோ: விஜய் கடைசியாக நடித்த வாரிசு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற சூழலில் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் லியோவுக்கு 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட் செலவழிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வளவு பட்ஜெட்டில் ஒரு படம் உருவாவது விஜய்யின் கேரியரில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீரில் இரண்டு மாதங்கள் ஷூட்டிங் முடிந்த சூழலில் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு அதில் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன. மேலும் அவுட்டோர் ஷூட்டிங் இனி வேண்டாம் என விஜய் கண்டிஷன் போட்டிருப்பதாகவும் தகவல் பரவிவருகிறது.
லியோவில், த்ரிஷா, மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

விஜய்யை காண ரசிகர்கள் ஆவல்: விஜய் படத்தின் ஷூட்டிங் தமிழ்நாட்டுக்குள் எங்கு நடந்தாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கமான விஷயம். அவரை ஒருமுறையேனும் பார்த்துவிட மாட்டோமா என ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலோடு காத்திருப்பார்கள். ஆனால் லியோ ஷூட்டிங் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பிரசாத் ஸ்டூடியோவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் வீட்டின் முன்பு அழுத இளம்பெண்: இந்நிலையில் நீலாங்கரையில் அமைந்திருக்கும் விஜய்யின் வீட்டின் முன்பு காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கை எடுத்து கும்பிட்டு கதறி அழும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர், "ஒரு முறையேனும் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும். சரி நேர்லதான் பார்க்க முடியல கேமராவிலாச்சும் பார்த்து பேசுகிறேன்.

வீடு வரைக்கும் வந்துட்டேன் அண்ணா: உங்க வீடு வரைக்கும் வந்துட்டேன். ஆனா உங்களைத்தான் பாரக்க முடியல. எப்டியாவது கூப்டுங்க. ரொம்ப நம்பிக்கையோட இருக்கிறேன். அழுகையா வருது. உங்களோட ஒரே ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்குறேன் ப்ளீஸ்" என கெஞ்சுகிறார். முன்னதாக, தன்னை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட சிறுமியை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு சில வாரங்களுக்கு முன்பு விஜய் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











