பிரதீப் ரங்கநாதனை பச்சை பச்சையாக திட்டிய இளம் பெண்.. டிராகன் படத்துல என்ன இருக்கு?.. சோலி முடிஞ்சு!

சென்னை: பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் நடைபெற்ற டிராகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தனக்கும் ஹேட்டர்கள் உள்ளார்கள் என்றும் தன்னை காலி செய்ய சிலர் பார்ப்பதாகவும் பேசியது கடுமையான ட்ரோலுக்கு உள்ளானது. நடிச்சதே ஒரு படம் தான். அதற்குள் இப்படி பேச ஆரம்பித்துவிட்டாரே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆனால், பிரதீப் ரங்கநாதன் அப்படி பேசியதற்கான உண்மையான அர்த்தமே இப்படி சில பேர் அவரை டைரக்ட் அட்டாக் செய்வது தான் காரணம் என இளம் பெண் ஒருவர் பிரதீப் ரங்கநாதனை பச்சை பச்சையாக திட்டிப் பேசும் வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Dragon Pradeep Ranganathan Archana Kalpathi

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விடாமுயற்சி படத்துக்காக அடுத்த வாரம் டிராகன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. தனுஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்துடன் மோதவுள்ள டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிப்படமாக மாறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

17 கோடி சம்பளமா?: அப்பா லாக் எனும் ஷார்ட் பிலிம் மூலம் பிரபலமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். அந்த கதையை முதல் படமாக எடுக்க நினைத்த அவருக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபுவை வைத்து கோமாளி படத்தை இயக்கி வெற்றியடைந்தார். அதன் பின்னர், தனது குறும்படத்தை லவ் டுடே எனும் படமாக இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தினார். அந்த படம் வெற்றியான நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் டிராகன் படத்துக்கு அவருக்கு 17 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

என் வளர்ச்சி பிடிக்கல: அதற்குள் இத்தனை கோடி சம்பளம் கேட்கிறாரா பிரதீப் ரங்கநாதன் என பலருக்கும் அவர் மீது பொறாமை எழுந்துவிட்டதாக அவரே மேடையில் பேசும் போது தன்னை சிலர் அழிக்க நினைப்பதாகவும், இந்த செடி வளர சிலர் தண்ணீர் ஊற்றுகின்றனர். அதன் வேர் ஆழமாக வளர்ந்து வருகிறது. ஒருநாள் பெரிய மரமாக மாறும் என்று பேசியுள்ளார்.

அவாய்ட் பண்ண நடிகைகள்: லவ் டுடே படத்தில் இவானாவுக்கு முன்னதாக மற்ற சில நடிகைகளை ஹீரோயினாக புக் செய்ய அணுகும் போது அவர்கள் எல்லாம் கால்ஷீட் இல்லை என சாக்கு போக்கு சொல்லி என்னுடன் நடிக்க மறுத்தனர். சில நடிகைகள், நாங்க பெரிய ஹீரோ படத்தில் நடிக்க பார்க்கிறோம் என உண்மையை சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் என இரண்டு நடிகைகள் ஹீரோயினாக கிடைத்துள்ளனர். இதையெல்லாம் நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்றார்.

அசிங்கமா திட்டிய இளம் பெண்: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தில் இருந்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள அப்படி என்ன இருக்கிறது. 48 அரியர் வைத்த ஒருத்தனே வாழ்க்கையில் உருப்பட்டுவிட்டான். நான் உருப்பட மாட்டேனா என இளைஞர்கள் நினைத்தால், சத்தியமா உருப்பட மாட்ட. பிரதீப் ரங்கநாதன் தறுதலை, பொறம்போக்கு போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவே படம் எடுக்கிறான் என அசிங்க அசிங்கமா பேசி விளாசியுள்ளார். அந்த இளம் பெண்ணின் பேச்சை எதிர்த்தும் ஆதரித்தும் பலர் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கும் இதே போன்ற விமர்சனங்கள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ரசிகையா?: சிவகார்த்திகேயன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் வளர்ச்சி பிடிக்காமல் தனுஷ் ரசிகர்கள் தான் இப்படி செய்வதாகவும் இதே பெண் ஏன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் டிரெய்லர் குறித்து எதுவுமே சொல்லவில்லை என்றும் இவர் தனுஷ் ரசிகையாகத் தான் இருப்பார் என்றும் பிரதீப் ஃபேன்ஸ் திட்டி வருகின்றனர். எந்த கருத்தாக இருந்தாலும் நாகரீகமான முறையில் சொல்ல வேண்டுமே தவிர அசிங்கமான வார்த்தைகளால் சொன்னால், அந்த நபரின் தகுதியும் தராதரமும் குறைந்துவிடும் என்றும் அந்த பெண்ணை பற்றிய இழிவான கமெண்ட்டுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X