சுட்டி டிவி ரைம்ஸ் மாதிரி இருக்குடா.. யுவனுக்கு சம்பள பாக்கியா.. கோட் பாடலை பங்கம் பண்ணிய இளம் பெண்!
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை இளம் பெண் ஒருவர் வீடியோ போட்டு பங்கமாக கலாய்த்து இருப்பது சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. ரசிகர்கள் சண்டை தற்போது வெறும் எழுத்தில் மட்டுமில்லாமல் வீடியோ வடிவிலும் மாறி இருப்பது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
விஜய் ரசிகர்கள் தன்னை கண்டபடி திட்டினாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் உள் மனதுக்கு தெரியும் இது ஒரு மொக்கை பாட்டு என "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க" என அந்த இளம்பெண் வெளியிட்டுள்ள வீடியோ விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்க்கி வரிகளில் உருவான கோட் பட பாடல் 30 மில்லியன் வியூஸை கடந்து வேற லெவலில் ரெக்கார்டு படைத்து வருகிறது.
சுட்டி டிவி ரைம்ஸ்: ஒரே நாளில் 3 கோடி பேர் பார்த்து ரசித்த விஜய் பாடிய 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான விசில் போடு பாடலை சுட்டி டிவி ரைம்ஸ் என விஜய்யின் ஹேட்டரான இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு கலாய்த்து இருப்பது சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
திட்டினாலும் பரவாயில்லை: இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டால் எப்படியும் விஜய் ரசிகர்கள் கெட்ட கெட்ட வார்த்தையில் தன்னை திட்டுவார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு நிலையில்தான் அந்தப் பெண் இப்படி ஒரு ட்ரோல் வீடியோவை வெளியிட்டுள்ளார். விஜய் ரசிகர்கள் தன்னை திட்டினாலும் பரவாயில்லை, ஆனால் உங்க உள் மனசுக்கே தெரியும் இது ஒரு மொக்கையான பாடல் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவுக்கு சம்பள பாக்கி: ஏஜிஎஸ் நிறுவனம் தயவுசெய்து யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏதாவது சம்பள பாக்கி வைத்திருந்தால் உடனடியாக கொடுத்து விடுங்கள் விஜய் ரசிகை அல்லாத தனக்கே இந்த பாடல் இவ்வளவு மோசமாக வந்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களின் நிலைமை ரொம்பவே பாவம் என கலாய்த்து துள்ளார். மேலும், பாடல் வரிகளை எழுதிய வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கிக்கும் ஏதாவது சம்பள பாக்கி இருந்தால் கொடுத்து விடுங்கள் மனுஷன் சோகத்திலேயே பாட்டை எழுதி இருப்பார் போல தெரிகிறது என பாடல் வரிகளையும் அந்த இளம் பெண் கழுவி ஊற்றி உள்ளார்.
திட்டும் ரசிகர்கள்: அஜித் ரசிகையாக இருந்து கொண்டு இப்படி வீடியோ போட்டு சந்தோசப்பட்டுக் கொள்ளும் இந்த பெண்ணுக்கு கடைசி வரை விடாமுயற்சி படத்தின் அப்டேட் கூட கிடைக்காது என விஜய் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். மேலும் அந்த பெண் குறிப்பிட்டது போலவே ஆபாச வார்த்தைகளால் எந்த அளவுக்கு மோசமாக அந்தப் பெண்ணை திட்டி அசிங்கப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் திட்டத் தொடங்கி விட்டனர்.
அரசியல் மாநாடு: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோட் படம் திரைக்கு வருகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழாவை அரசியல் மாநாடு போல நடத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











