பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
சென்னை: விஜய் நடித்த கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், திங்கள், செவ்வாய் என வார நாட்களில் கூட இளைஞர்கள் கூட்டம் அலைமோதும் அளவுக்கு அந்த படம் ஓடுவதை பார்த்தால் இந்த ஆண்டு ஒரு இயக்குநரும் உருப்படியான புதிய படங்களை தமிழ் சினிமாவில் வெளியிடவில்லை என்று தான் தெரிகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஒரு படத்தை சன் டிவியில் 100 தடவைக்கு மேல் பார்த்தாலும், மீண்டும் தியேட்டரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று ரகளை செய்து கில்லி படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படத்தின் லைஃப் டைம் வசூலை 4 நாட்களில் கில்லி ரீ ரிலீஸ் கடந்து விட்டதாக விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் வெறுப்பேற்றி வருகின்றனர்.
கில்லி வசூல்: தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் உருவான கில்லி திரைப்படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. கடந்த சனிக்கிழமை வெளியான கில்லி திரைப்படம் இதுவரை 17 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமே 12 கோடி ரூபாய் கலெக்ட் செய்திருப்பதாக கூறுகின்றனர்.
லால் சலாம் வசூலை முந்தியது: விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், செந்தில், தம்பி ராமைய்யா, தான்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹார்ட் டிஸ்க்கை தொலைத்தாலும் மேட்ச் பண்ணி வெளியிட்ட லால் சலாம் படம் 16 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்படும் நிலையில், கில்லி திரைப்படம் 17 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பெண்கள் பேயாட்டம்: தளபதி விஜய்யின் கிரேஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதுவும் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அறிவித்த நிலையில், கேரளாவில் விமான நிலையத்தில் இருந்து இறங்கி ஹோட்டல் ரூமுக்கு கூட போக முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. தேர்தல் நாளன்று வாக்களிக்க வரும்போதும் அவரை நடக்கவே விடாதபடி ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தனர். இந்நிலையில், கில்லி படத்தின் ரீ ரிலீஸை பார்த்து சில பெண்கள் பேயாட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு தளபதி ரசிகர்களையே ஷாக் ஆக்கி உள்ளனர்.
கோட் வரட்டும்: கில்லி ரீ ரிலிஸ் படத்துக்கு ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாக்களாக மாற்றி வரும் நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் போது தியேட்டர்களின் நிலை என்னவாகும் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்ப்பு எகிறவிட ஆரம்பித்து விட்டனர்.
தளபதி 69: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தளபதி 69 படத்தின் இயக்குநர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் தயாரிப்பாளர் முடிவாகாத சூழலில் இயக்குநரையும் நடிகர் விஜய் உறுதி செய்யவில்லை என்று கூறுகின்றனர். கோட் படத்தின் ரிலீஸுக்கு முன் தளபதி 69 இயக்குநர், தயாரிப்பாளர் என அனைத்தும் முடிவு ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர்


Click it and Unblock the Notifications











