போதைப் பொருள் விவகாரம்.. அடிபட்ட பிரபல நடிகையின் பெயர்.. அப்செட்டில் இளம் ஹீரோ?

சென்னை: போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அந்த பாலிவுட் நாயகி, போற போக்கில், மேலும் சில நடிகைகளின் பெயர்களையும் கோர்த்து விட்டுள்ளார்.

பிரபல நடிகை ஒருவரின் பெயர் அந்த லிஸ்டில் உள்ள நிலையில், அவரை நம்பி அந்த பெரிய படத்தை உருவாக்கி வரும் அந்த இளம் ஹீரோ கடும் அப்செட்டில் உள்ளாராம்.

ஆட்டி படைக்கிறது

ஆட்டி படைக்கிறது

அந்த இளம் நடிகரின் மர்ம மரணம் பாலிவுட்டையே ஆட்டி படைத்து வருகிறது. ஏகப்பட்ட பிரபலங்கள், வாயை மூடிக் கொண்டு பேசாமல், அடுத்து நாம மாட்டிக்குவோமா என்கிற பயத்தில் அலண்டு போயுள்ளனர். சிலர் நமக்கு ஏன் பா இந்த வேண்டாத வேலை என கண்டு கொள்ளாமல் கடந்து போகின்றனர்.

காதலித்த பாவம்

காதலித்த பாவம்

அந்த மறைந்த நடிகரை காதலித்த பாவத்தின் காரணத்தால், இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறார் அந்த இளம் பெண்குயின். சிறை வாசம் அனுபவித்து வரும் அவர், இதிலிருந்து நாம தப்பிக்க வில்லை என்றாலும் பரவ இல்லை, ஒருத்தரையும் சும்மா விடக் கூடாது என கரம் கட்டி இருப்பது மட்டும் நிதர்சனம் என்பது தெரிகிறது.

போட்டுக் கொடு

போட்டுக் கொடு

விசாரணையில், எல்லாத்துக்கும் காரணம் செத்துப்போன அந்த நடிகர் தான் காரணம் என பூரா பழியையும் அந்த நடிகர் மீதே போட்டு வருகிறாராம். மேலும், தனக்கு ஆகாத சில நடிகைகள் பெயரையும் கூட சேர்த்து கோர்த்து விட்டுள்ளாராம் அந்த இளம் பாலிவுட் நடிகை. அவருடன் பழகியதற்கு நல்லா வச்சு செஞ்சுட்டாரே என பதறி போயுள்ளனர் அந்த இளம் நடிகைகள்.

இளம் ஹீரோ அப்செட்

இளம் ஹீரோ அப்செட்

எந்த நேரத்தில் நாம கைதாவோம் என்கிற அச்சத்தில் சமூக வலைதளங்களில் கூட தலை காட்டாமல், அந்த ஹீரோயின் ஓரமா முடங்கிப் போய் கிடக்கும் நிலையில், என் கவலை எனக்கு, உன்னைய வச்சி படம் பண்ணியிருக்கேன். ஏற்கனவே அந்த படம் பல தடவை டிராப் ஆகி மறுபடியும் ஆரம்பிச்சது. இப்போ இதுவேறயா என இளம் ஹீரோ ஒருவர் ரொம்பவே அப்செட் ஆகி போயுள்ளாராம்.

பிரம்மாண்டத்தின் படம்

பிரம்மாண்டத்தின் படம்

இது கூட பரவாயில்லை அந்த நடிகை நடிப்பில் பிரமமண்டத்தின் படம் ஒன்று உருவாகி வருகிறது. ஒரு வேளை அந்த நடிகை கைது செய்யப்பட்டால், சீரியலில் வருவது போல இவருக்கு பதில், இவர் என ஆளை மாற்றித் தான் நடிக்க வைக்க வேண்டிய நிலை வந்தாலும் வரும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X