கட்டுப்பாட்டை இழந்து கட்டிடத்தில் மோதி உருக்குலைந்த கார்.. இளம் ஹீரோ பலி.. திரையுலகம் அதிர்ச்சி!

By

கொச்சி: கார் விபத்தில் பிரபல இளம் ஹீரோ மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபரூக் அகமதுலி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம், பூவாலியும் குஞ்சாடும் (Poovalliyum Kunjadum).

ஆர்யா மணிகண்டன், கோட்டயம் நாசர், ஷம்மி திலகன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த வருடம் ஆக்ஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகி இருந்தது.

மூவாட்டுப்புழா

மூவாட்டுப்புழா

இதில் ஹீரோவாக நடித்திருந்தவர் பசில் ஜார்ஜ் (30). இந்தப் படத்தை அடுத்து மேலும் சில படங்களில் நடிக்க இருந்தார். இந்நிலையில் கேரள மாநிலம் கொளஞ்சேரி என்ற பகுதியில் இருந்து ஒரு காரில், இவர் மூவாட்டுப்புழாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். காரில், டிரைவருடன் வலக்கத்தைச் சேர்ந்த நிதின் பாபு, அஸ்வின் ஜாய் உட்பட 5 பேர் இருந்தனர்.

வேகமாக மோதியது

வேகமாக மோதியது

மேக்கடம்பு என்ற பகுதிக்கு வந்தபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து எதிரில் இருந்த ஒரு போஸ்டில் இடித்துவிட்டு, அருகில் இருந்த கட்டிடத்தில் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில், கார் அப்பளம் போல உருக்குலைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த, பசில் ஜார்ஜ், நிதின்பாபு, அஸ்வின் ஜாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

காரில் இருந்த மேலும் 2 பேரும் கட்டிடத்தில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து, காருக்குள் சிக்கி இருந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இளம் ஹீரோ ஒருவர் உயிரிழந்திருப்பது கேரள சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமா துறையினர், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X