இளம் பாடகர் சுட்டுக் கொலை: காதல் பிரச்சனை காரணமா?

By Siva

சண்டிகர்: பஞ்சாபில் வளர்ந்து வரும் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நவ்ஜோத் சிங்(22). வளர்ந்து வரும் பாடகரான அவர் சண்டிகர் அருகே உள்ள எஸ்.ஏ.எஸ். நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 போலீஸ்

போலீஸ்

தேரா பஸ்ஸி பகுதியில் நவ்தீப் சிங் உடம்பில் 5 குண்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கார்

கார்

நவ்தீப் சிங்கை யாரோ அருகில் இருந்து சுட்டுள்ளனர். அவரின் நிஸ்ஸான் மைக்ரா கார் அவரது உடல் கிடந்த இடத்திற்கு அருகில் நின்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. தொழில் பகை இருப்பதாகவும் தெரியவில்லை.

கிராமம்

கிராமம்

நவ்தீவ் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது தாய்க்கு போன் செய்து தனது சொந்த ஊரான பெஹ்ரா கிராமத்திற்கு திரும்பி வருவதாக தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி வராததால் குடும்பத்தார் அவரை தேட ஆரம்பித்தனர்.

காதல்

காதல்

நவ்தீப் சிங் மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு அருகே ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்ததை அவரது உறவினர் பார்த்துள்ளார். காதல் விவகாரம் தொடர்பாக நவ்தீப் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X