யப்பா அது விஜய் இல்லப்பா.. பிரேமலு அமல் டேவிஸ்ப்பா.. ’கோட்’ ஷாட்ஸை பங்கம் பண்ண ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12:01 மணிக்கு அட்டகாசமாக 'கோட்' படத்தின் ஷாட்ஸ் வீடியோ வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு இடங்களில் தளபதி நடித்து வருகிறார்.

கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்கில் வெளியான மகன் விஜயின் தோற்றத்தை பொம்மை போல இருப்பதாக பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் கோட் ஷாட்ஸ் வீடியோவை பார்த்துவிட்டு விஜய் ஹேட்டர்கள் மகன் விஜய் பிரேமலு படத்தில் வரும் நடிகர் போல உள்ளார் என கலாய்த்து வருகின்றனர்.

Vijay Vijay birthday GOAT Venkat Prabhu

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கோட் படத்தின் மினி டீசர் போல உள்ள அந்த ஷாட்ஸ் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. யூடியூபில் அதிக வியூஸ்களை அள்ளி வரும் நிலையில், தொடர்ந்து விஜய் பிறந்தநாள் என்றும் பார்க்காமல் அஜித், சூர்யா மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய்யின் கோட் படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பாட்டு காப்பி: சூர்யா நடிப்பில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம்பெற்ற "இரவா பகலா" பாடல் ட்யூனை காப்பியடித்து யுவன் சங்கர் ராஜா கோட் படத்திற்கு மீண்டும் பயன்படுத்தியுள்ளார் என ஒரு பக்கம் ட்ரோல்கள் செகண்ட் சிங்கிள் சின்ன க்ளிம்ப்ஸ் வெளியான நிலையில் பரவி வருகின்றன. மேலும், நள்ளிரவு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கோட் ஷாட்ஸும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

இது அமல் டேவிஸ்ப்பா: கில்லி படத்தில் விஜய்யை வரைய சொன்னால் கம்ப்யூட்டரில் ஜெமினி கணேசனை வரைந்து விடுவார்கள். உடனடியாக பிரகாஷ் ராஜ் இது ஜெமினி கணேசன்ப்பா என பேசும் வசனம் கடைசியாக விஜய் நடித்துள்ள கோட் படத்திற்கு பொருந்தும் நிலைமைக்கு வெங்கட் பிரபு கொண்டு வந்துவிட்டார் என கலாய்த்து வருகின்றனர். பிரேமலு படத்தில் நண்பனாக வரும் அமல் டேவிஸ் உருவம் போலவே மகன் விஜய்யின் தோற்றம் டீ ஏஜிங்கில் கொடூரமாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சின்ன கோட் ஷாட்ஸை பார்த்தே விஜய் ஹேட்டர்கள் பொளந்து கட்டி வருகின்றனர்.

Vijay Vijay birthday GOAT Venkat Prabhu

பொம்மை படம்: படம் முழுக்கவே மகன் விஜய்க்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பது படத்தின் ஷூட்டிங்கில் பல நாட்கள் நடிகர் விஜய் யங் லுக்கில் நடித்து வந்தபோது ரசிகர்களை சந்தித்து வந்த நிலையில், வெங்கட் பிரபு விஜய்யை அப்படியே காட்டி இருந்தாலே நல்லா இருக்கும் என்றும் இப்போது பார்க்க பொம்மை படம் போல உள்ளது என்றும் விஜய் ஹேட்டர்கள் தளபதி ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

தாறுமாறா இருக்கும்: செப்டம்பர் 5ம் தேதிக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு ரசிகர்கள் அப்டேட் கேட்டதால் தான் அவசர அவசரமாக இந்த வெர்ஷனை வெளியிட்டு இருப்பார்கள் என்றும் படம் வெளியாகும் முன்பு பக்காவாக வரும் என்றும் சிலர் மனதை தேற்றி வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா பாடல்கள் எப்படியோ தெரியாது. இந்த காட்சியில் அவர் பிஜிஎம் கிங் என நிரூபித்துள்ளார் தியேட்டரில் இந்த சீன் தெறிக்கப் போகுது என தளபதி ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X