சுல்தான் டீசரில் இதையெல்லாம் கவனீச்சீங்களா.. விலாவரியாக அலசியிருக்கும் இளம் விமர்சகர்!
சென்னை: சுல்தான் படத்தின் டீசர் குறித்து இன்ச் பை இன்ச்சாக அலசியுள்ளார் இளம் விமர்சகரான அஷ்வின்.
நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுல்தான். இந்தப் படத்தை ரெமோ படத்தை இயக்கிய, பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். சுல்தான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

போர் இல்லாமல்
மேலும் இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதில் மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பேசும் கார்த்தி மகாபாரதத்தை ஒரு முறை போர் இல்லாமல் படித்து பாருங்கள் என்று கூறுகிறார்.

டீசர் காட்டப்படும் காட்சிகள்
இந்நிலையில் சுல்தான் டீசரில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து விளக்கியுள்ளார் அஷ்வின். அதன்படி டீசரில் காட்டப்படும் காட்சிகளை பட்டியலிட்டுள்ள அஷ்வின் கேஜிஎஃப் படத்தில் கருடனாக நடித்தவரும் சுல்தானில் நடித்திருப்பதை குறிப்பிட்டுள்ளார். கார்த்தி தன்னுடைய குடும்பத்தில் உள்ள ரவுடி கேங்கை திருத்தி விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்புவதாக கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

சமமாக பார்க்கப்படுவதில்லை
மேலும் நடந்து முடிந்த மகாபாரதம் விஷயத்தை இந்த படத்தில் கொண்டு வந்துள்ளனர். கிருஷ்ணர் ஏன் பாண்டவர்கள் பக்கத்தில் நின்றார். கவுரவர்களை ஏன் திருத்தவில்லை? ஏன் எல்லோரையும் சமமாக பார்க்கப்பதில்லை என்று கார்த்தி கேட்கும் கேள்விகளையும் குறிப்பிட்டுள்ளார்.

அடிமைப்படுத்த முயற்சி
மகாபாரதத்தை போரில்லாமல் பாருங்கள் என்று கார்த்தி கூறியிருப்பதற்கு அதுதான் காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் சேவை செய்ய நினைக்கும் கார்த்தியின் கேங்கை வில்லன் கேங் அடிமைப்படுத்த முயற்சிப்பதையும் அந்த மக்களை காப்பாற்றும் கார்த்திக்கு அவர்கள் ஆதரவாய் இருப்பதையும் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சாட்டையால் வெளுப்பு
மேலும் முதல் காட்சியில் காட்டப்படும் சாட்டையை வைத்து கார்த்தி இறுதியில் வெளுப்பதையும் கூறியுள்ளார். ஒரு நிமிட டீசரில் இவ்ளோ விஷயங்களை பாக்யராஜ் கண்ணன் ஒளித்து வைத்திருப்பதாக கூறியுள்ள அஷ்வின் படம் முழுக்க எவ்வளவு விஷயங்கள் இருக்கும் என்றும் கேட்டுள்ளார்.
சமமாக பார்க்க வேண்டும்
சமூதாயத்தில் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும், அனைவரும் சமூக சேவை செய்ய வேண்டும் என்று சுல்தான் மூலம் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படம் ஏப்ரல் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதையும் குறிப்பிட்டுள்ள அஷ்வின், டீசரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications