twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!

    |

    சென்னை: நடிகர் கார்த்தியை இயக்கும் இயக்குநர்களின் கிராஃப் எகிறுவது எப்படி என்பது குறித்து அலசியிருக்கிறார் இளம் விமர்சகர் அஷ்வின்.

    தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

    'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்! 'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

    தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. இந்நிலையில் கார்த்தியை வைத்து இயக்கும் இயக்குநர்களின் கிராஃப் அவர்களின் அடுத்த படங்களிலேயே எக்குத்தப்பாய் உயர்வது குறித்து அலசியிருக்கிறார் இளம் எழுத்தாளரும் விமர்சகருமான அஷ்வின்.

    இயக்குநர்களை தூக்கிவிடுவது..

    இயக்குநர்களை தூக்கிவிடுவது..

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒவ்வொரு காலக்கட்டத்துலேயும் ஒரு ஹீரோ வருவாங்க. அவங்க படங்கள் நடிப்பது மட்டுமில்லாம நல்ல நல்ல இயக்குநர்களை தூக்கி விடுவது அவர்களை மெருகேற்றி விடுவது, இந்த மாதிரி சில வேலைகள் செய்வாங்க. எம்ஜிஆர் சிவாஜி காலத்துலேருந்தே இந்த மாதிரி இருந்துட்டுருக்கு.

    சித்தப்பு கேரக்டருக்கு பிறகு..

    இப்போது அந்த மாதிரி இருக்கும் ஒரு ஹீரோ என்றால் அது கார்த்தி சார்தான். அவர் பருத்திவீரன் படத்தில் தனக்கு சித்தப்பு ரோலில் நடித்த சரவணனை தூக்கிவிட்டார். அதற்கு முன்பு வரை சரவணன் நடித்த எந்த படமும் அந்தளவுக்கு ஃபேமஸ் ஆகவில்லை. அந்த சித்தப்பு கேரக்டருக்கு பிறகுதான் ஃபேமஸ் ஆனார்.

    கொண்டாடி வருகின்றனர்..

    கொண்டாடி வருகின்றனர்..

    பருத்திவீரன் படத்திற்கு பிறகு பருத்தி வீரன் சரவணன் என்று சொல்லும் அளவுக்கு அவரது கேரக்டர் இருந்தது. ஆயிரத்தில் ஒருவன் படம் வெளிவந்த போது மக்கள் அந்தளவுக்கு அதனை கொண்டாடவில்லை. தற்போது அந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

    சிறுத்தை படம்

    சிறுத்தை படம்

    நான் மகான் அல்ல, சுசீந்திரனுக்கு இரண்டாவது படம். கார்த்தியின் படங்கள் எல்லாமே கேரியர் வகையில் ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டிக்கிறது. சிறுத்தை படம் அந்த மாதிரிதான். அந்த படத்தில் இருந்துதான் இயக்குநர் சிவா, சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். அஜித்துடன் 4 படங்கள் பண்ணியும் சிறுத்தை சிவாதான் என்று அழைக்கப்படுகிறார். அந்தளவுக்கு அந்தப் படம் ஒரு நல்ல ரீச்சை கொடுத்தது.

    ரஞ்சித்துடன் மெட்ராஸ்..

    ரஞ்சித்துடன் மெட்ராஸ்..

    அடுத்து கொம்பன் படம் இயக்குநர் முத்தையாவுடன் பண்ணினார். குட்டிப்புலி படத்தை தொடர்ந்து அந்தப் படம் அவருக்கு நல்ல எஸ்டாபிளிஷை கொடுத்தது. அடுத்து அவர் நடித்த மெட்ராஸ் படம், அட்டக்கத்தி படத்திற்கு பிறகு
    ரஞ்சித்தை எஸ்டாபிளிஷ் ஆக்கியது. ஒரு சுவரை வைத்து நடக்கும் அரசியலை கூறினார்.

    வம்சி இயக்கத்தில் தோழா

    வம்சி இயக்கத்தில் தோழா

    அந்தப்படத்திற்கு பிறகு அதில் நடித்த அனைவருமே அதிக படங்களில் கமிட்டானார்கள். அந்தப் படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்தே ரஞ்சித்தை அழைத்து பட வாய்ப்பு கொடுத்தார். அடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி தமிழில் முதல் முறையாக இயக்கிய படம் தோழா. இந்தப் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

    அடுத்தடுத்த படங்கள்..

    அடுத்தடுத்த படங்கள்..

    கார்த்தியை இயக்கும் இயக்குநர்கள் எல்லாருமே படம் ரிலீஸ் ஆவதற்குள் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி விடுவார்கள். கார்த்தி ஒரு லக்கி ஹீரோ. அந்த வகையில் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அதன் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணியின் போதே விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

    விரும்பப்படும் இயக்குநர்கள்

    விரும்பப்படும் இயக்குநர்கள்


    இந்த மாதிரி பல இயக்குநர்களை சொல்லிக் கொண்டே போகலாம். சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய ஹெச் வினோத்குமார் அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். பலர் பல பேரை ஏற்றி விட்டிருப்பார்கள். அந்த வகையில் இன்று இன்டஸ்ட்ரியில் அதிகம் விரும்பப்படும் இயக்குநர்கள் பலர் கார்த்தியை இயக்கியவர்கள் தான்.

    ராசிக்கார நடிகர்

    ராசிக்கார நடிகர்

    இவர் நடிப்பதால் ஹிட்டாகிறதா? இவருக்காகவே கதைகள் எழுதப்படுகிறதா? என்று தெரியவில்லை. ராசிக்காரர் ஆகிவிட்டார். கார்த்தியால் அறிமுகப்படுத்தப்படும் அனைவரின் கிராஃப்புமே ஏறுகிறது. பொன்னியின் செல்வன் போன்ற பெரிய படங்களில் நடித்தாலும் இளம் இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

    விஜய்யின் 60வது படம்

    விஜய்யின் 60வது படம்

    தேவர் மகன் படத்தில் இடம் பெறும் விதை நான் போட்டது என்று டயலாக்கை போல், தீரன் அதிகாரம் ஒன்று வந்ததால் தான் நேர்க்கொண்ட பார்வை வந்தது. அதன்பிறகுதான் வலிமை படம் வந்தது. இதேபோல் லோக்கேஷ் கனகராஜூக்கு கைதி படம் வந்ததால்தான் மாஸ்டர் வாய்ப்பு கிடைத்தது. விஜய்யின் 60வது படத்தையும் அவர்தான் இயக்குவார் என தெரிகிறது.

    ஆரம்பப்புள்ளி கார்த்திதான்

    ஆரம்பப்புள்ளி கார்த்திதான்

    கடைக்குட்டி படத்தின் மூலம் தயாரிப்பாளராக சூர்யாவையும் ஏற்றிவிட்டார். பெரிய நடிகர்கள் பலரும் விரும்பும் இயக்குநர்களின் டிமாண்ட் அதிகமாக இருக்க காரணம் கார்த்திதான். மாஸ்டர் வெற்றியை கொண்டாடுகிறார்கள். நேர்கொண்ட பார்வை வெற்றியை கொண்டாடுகிறார்கள். ஆரம்பப் புள்ளியாக இருந்தது கார்த்திதான்.

    என்னென்ன அற்புதங்கள்

    என்னென்ன அற்புதங்கள்

    கார்த்தி நடித்ததால் தான் அவரை வைத்து இயக்கிய இயக்குநர்கள் பெரிய ஹீரோக்களை வைத்து இயக்க, கார்த்தி கொடுத்த வெற்றியே காரணம். கார்த்தி இன்னும் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தப் போகிறாரோ என்று பிரமித்துள்ள அஷ்வின், அவர் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Read more about: actor karthi
    English summary
    Young youtuber Ashwin reviews about actor Karthi movie's director. Actor Karthi's directors graphs goes high after working with him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X