twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விரிந்த திரையில்.. வரிசை கட்டும் ஸ்போர்ட்ஸ் படங்கள்.. கிடுகிடு உயர்வு .. ஒரு ரிப்போர்ட்!

    |

    Recommended Video

    தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் SPORTS படங்கள் | HIT or FLOP | V-connect |FILMIBEAT TAMIL

    சென்னை: மற்ற திரைப்படங்களை விட ஸ்போர்ட்ஸ் தொடர்பான திரைப்படங்களில் பரபரப்பும் விறுவிறுப்பும் அதிகமாக இருக்கும் என்பதால் தான் ரசிகர்களும் இளைஞர்களும் ஸ்போர்ட்ஸ் தொடர்பான திரைப்படங்களை அதிக அளவில் விரும்பி பார்க்கிறார்கள்.

    கடந்த 12 ஆண்டுகளில் எடுத்துக்கொண்டால், மற்ற திரைப்படங்களையும் விட ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்களைத்தான் ரசிகர்களும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் அதிகமாக விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படங்களுக்கு முக்கியமான திருப்புமுனை ஆண்டாக அமைந்தது என்றால் அது நிச்சயமாக 2007ஆம் ஆண்டு தான்.

    அந்த ஆண்டில் தான் அதிகப்படியாக மூன்று படங்கள் ஸ்போர்ட்ஸ் தொடர்பான படங்களாக அமைந்தன. கடந்த 2007ஆம் ஆண்டில் இந்தியா 20:20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற சூட்டோடு எடுக்கப்பட்ட சென்னை 600028 திரைப்படம் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

    ஸ்போர்ட்ஸ் படங்கள் மீது விருப்பம்

    ஸ்போர்ட்ஸ் படங்கள் மீது விருப்பம்

    இன்றைய காலகட்டத்தில் சினிமா ரசிகர்களை தியேட்டரை நோக்கி இழுக்க வேண்டுமென்றால் ஒன்று திரில்லருடன் கூடிய பேய் படமாகவோ காமெடி படமாகவோ அல்லது ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படமாகவோ இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தியேட்டருக்கு கூட்டம் வரும்.

    12 ஆண்டு வரலாறு

    12 ஆண்டு வரலாறு

    அதிலும் பள்ளிக்கூட மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும் கவர வேண்டுமானால் நிச்சயமாக ஸ்போர்ட்ஸ் தொடர்பான திரைப்படமாக இருந்தால் நிச்சயமாக அந்தப்படம் வெற்றி பெறும், இது கடந்த 12 ஆண்டுகளில் நடந்து வரும் நிகழ்வாகும்.

    மாஸ் ட்ரெண்ட் செட் ஹீரோ

    மாஸ் ட்ரெண்ட் செட் ஹீரோ

    அதற்கு முன்பாக தளபதி விஜய் நடித்த கில்லி திரைப்படம் கபடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வெற்றி பெற்றாலும் கூட அது வர்த்தக ரீதியில் வெற்றி பெற்று ஜனரஞ்சகமான படமாக மட்டுமே பார்க்கப்பட்டது. அது ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான திரைப்படமாக பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    கில்லி

    கில்லி

    கில்லி படத்திற்கு பிற்பாடு தான் விஜய் ஒரு மாஸ் ட்ரெண்ட் செட் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.அதன் பிறகு சில ஆண்டுகள் ஸ்போர்ட்ஸ் தொடர்பான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பின்பு 2007ஆம் ஆண்டு முதல் தான் ஸ்போர்ட்ஸ் தொடர்பான திரைப்படங்கள் இந்திய அளவில் அதிகமாக வெளிவரத் தொடங்கின.

    இளைஞர்களின் விருப்பம்

    இளைஞர்களின் விருப்பம்

    கடந்த 12 ஆண்டுகளில் எடுத்துக்கொண்டால், மற்ற திரைப்படங்களையும் விட ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்களைத்தான் ரசிகர்களும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் அதிகமாக விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படங்களுக்கு முக்கியமான திருப்புமுனை ஆண்டாக அமைந்தது என்றால் அது நிச்சயமாக 2007ஆம் ஆண்டு தான்.

    சென்னை 600028 படம்

    சென்னை 600028 படம்

    அந்த ஆண்டில் தான் அதிகப்படியாக மூன்று படங்கள் ஸ்போர்ட்ஸ் தொடர்பான படங்களாக அமைந்தன. கடந்த 2007ஆம் ஆண்டில் இந்தியா 20:20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற சூட்டோடு எடுக்கப்பட்ட சென்னை 600028 திரைப்படம் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. அந்தப் படத்தில் நடித்த மிர்ச்சி சிவா தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

    100 கோடி வசூலான சக் தே இந்தியா

    100 கோடி வசூலான சக் தே இந்தியா

    அதே போல் 2007ஆம் ஆண்டில், இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஹாக்கி விளையாட்டை கொண்டு சக் தே இந்தியா திரைப்படமும் வெளியாகி வசூல் மழை பொழிந்தது. அப்போதே அந்த திரைப்படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது. ஒரு விளையாட்டு சம்பந்தமான திரைப்படம் இந்த அளவுக்கு வசூலானது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

    பரோட்டா சூரியை அடையாளம் காட்டிய படம்

    பரோட்டா சூரியை அடையாளம் காட்டிய படம்

    இதனைத் தொடர்ந்து கால்பந்து விளையாட்டை வைத்து லீ திரைப்படமும், அடுத்ததாக 2009ஆம் ஆண்டில் கபடியை மையப்படுத்தி வெண்ணிலா கபடி குழு படம் வெளிவந்தது. இந்தப்படத்தில் நடித்த பரோட்டா சூரிக்கு இந்தப் படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்திற்கு பிறகே இவர் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக உருவெடுத்தார். அதே போல் இப்படத்தில் அறிமுக நாயகனாக நடித்த விஷ்ணு விஷாலும் தமிழ் சினிமாவில் முக்கிய நாயகனாக வலம் வரத் தொடங்கினார்.

    சாதனை படைத்த எம்.எஸ்.தோனி

    சாதனை படைத்த எம்.எஸ்.தோனி

    இதற்கடுத்ததாக, 2013ஆம் ஆண்டில் ஓட்டப்பந்தயத்தை மையப்படுத்தி எதிர் நீச்சல் படம் வெளியானது. இதில் நடித்த சிவகார்த்திகேயன் இன்றைக்கு தமிழ் சினிமாவில் பிரமாண்ட வளர்ச்சி பெற்றுவிட்டார். 2014ஆம் ஆண்டில் பேஸ்கட் பால் விளையாட்டை மையப்படுத்தி வல்லினம் படமும், கிரிக்கெட்டை மையப்படுத்தி ஜீவா திரைப்படமும், பெண்கள் குத்துச்சண்டையை மையப்படுத்தி மேரி கோம் திரைப்படமும், தொடர்ந்து 2016ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படம் வெளியானது.

    சக்கை போடு போட்ட தங்கல்

    சக்கை போடு போட்ட தங்கல்

    அதே போல் இந்தியில் அமீர் கான் நடிப்பில், பெண்கள் மல்யுத்தத்தை கொண்டு தங்கல் திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டது. தொடர்ச்சியாக தமிழில் பெண்கள் கிக் பாக்ஸ் விளையாட்டை கொண்டு இறுதிச்சுற்று திரைப்படம் வெளியாக வசூலை அள்ளியது. இப்படத்தில் நடித்த ரித்திகா சிங் உண்மையான கிக் பாக்ஸ் வீராங்கனை என்பது அனைவருக்கும் தெரியும்.
    கனவு காண வைத்த கனா

    அடுத்ததாக 2018ஆம் ஆண்டில் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி கனா படமும், சமீபத்தில் வெண்ணிலா கபடி குழு 2 படமும், பெண்கள் கபடியை முன்னிறுத்தி கென்னடி கிளப் திரைப்படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியில் தற்போது தடகளப் போட்டியை மையப்படுத்தி ராஷ்மி ராக்கெட் திரைப்படம் தயாராகி வருகிறது.

    மற்ற திரைப்படங்களை விட ஸ்போர்ட்ஸை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு அனைத்து விதமான ரசிகர்களும் ஆதரவு தருவதால் தான் அடிக்கடி இந்த மாதிரியான படங்கள் எடுக்கப்படுகின்றன.

    கபடிக்கு தான் அதிக மவுசு

    கபடிக்கு தான் அதிக மவுசு

    மற்ற ஸ்போர்ட்ஸ்களை விட தமிழ் நாட்டில் கபடிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதனால் தான் தொடர்ந்து கபடி சம்பந்தமான திரைப்படங்களே அடுத்தடுத்து வெளியாகின. சமீபத்தில் தொடர்ச்சியாக வெண்ணிலா கபடி குழு 2 திரைப்படமும், அடுத்ததாக கென்னடி கிளப் திரைப்படமும் வெளியாகின.

    சுசீந்திரனின் சேம்பியன்

    சுசீந்திரனின் சேம்பியன்

    தற்போது இயக்குநர் சுசீந்திரன் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி சேம்பியன் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். மற்ற படஙகளை விட ஸ்போர்ட்ஸ் தொடர்பான படங்களில் தான் பரபரப்பும் விறுவிறுப்பும் அதிகமாக இருக்கும் என்பதலேயே ரசிகர்கள் இது தொடர்பான திரைப்படங்களை அதிகம் விரும்புகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

    English summary
    Concerning Sports movies are more exciting than the other films. Therefore, fans and young people are increasingly looking forward to sports related films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X