நீங்க அனுதாபப்படுறதால அவங்களுக்கு அவங்க புருஷன் கிடைக்கப்போறதில்ல.. பப்ளிக்கை விளாசும் வனிதா!
சென்னை: நீங்கள் அனுதாபப்படுவதால் அவருக்கு அவரின் புருஷன் கிடைக்கப்போவதில்லை என பீட்டர் பாலின் முதல் மனைவி விஷயத்தில் பப்ளிக்கை விளாசியுள்ளார் நடிகை வனிதா.
Recommended Video
வனிதா என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது, எதையாவது பேசிய விமர்சனத்துக்கு உள்ளாவது என இருந்து வருகிறார். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் விமர்சனத்துக்கு ஆளானார்.
தொடர்ந்து பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார். ஏற்கனவே இரண்டு திருமணம் பிரச்சனையானதை தொடர்ந்து இந்த மூன்றாவது திருமணமும் சர்ச்சையாகியிருக்கிறது.

போலீஸில் புகார்
ஏற்கனவே திருமணம் செய்த பீட்டர் பாலுக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் பள்ளியில் படிக்கும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் பீட்டர் பால். இதனை தொடர்ந்து முதல் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அடுத்தவர் புருஷனுக்கு ஆசை
இதனால் வனிதா இப்படி ஏமாந்துவிட்டாரே என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இன்னும் சில நெட்டிசன்கள் எதற்கு அடுத்தவர் புருஷனுக்கு ஆசைப் படுகிறீர்கள் என்று விமர்சித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட வனிதா, எல்லோரையும் கிழித்து தொங்கவிட்டார்.

சகோதரிகள் மீது பாய்ச்சல்
மிடில் கிளாஸ் மக்கள், கடவுள்கள் என யாரையும் விட்டு வைக்காமல் சாடினார். இந்நிலையில் அவரது சகோதரிகளை விடாமல் விளாசி தள்ளிய வனிதா ஹெலனுக்கு அவரது கணவர் கிடைக்கபோறதில்லை என்றும் தெனாவட்டாக கூறியிருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது, என் சிஸ்டர்ஸ் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.

சொத்த ஏமாத்தினாங்க
என் சொத்தெல்லாம் ஏமாத்தினாங்க. என் சகோதரிகளை பத்தி எனக்கு தெரியும். எல்லாரும் என்ன ஏமாத்தினாங்க. என் அப்பாவே என்னை ஏமாத்தினாரு. என்னப்பத்தி நீங்க ஜட்ஜ் பண்ணாதீங்க வனிதா தப்பு செய்யல. தப்பான முடிவு எடுக்கல. நான் உண்மையா இருக்கேன். மீடியாக்கள் நான் இறந்தால் நல்லா எழுதுவீங்க. உங்களோட அனுதாபம் எனக்கு தேவையில்லை.

40 வருஷமா காத்திருக்கேன்
நீங்க அனுதாபப்படுறாதல அவங்களுக்கு புருஷனும் கிடைக்கப் போறதில்ல. சட்டப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்கும். நான் 40 வருஷம் இவருக்காகதான் காத்திருக்கிறேன். இப்போது நான் அவரை திருமணம் செய்து அவருடைய மார்க்கெட்டை ஏத்தி விட்டிருக்கேன், விசாரிக்காம அவரை கல்யாணம் பண்ணல. எல்லாமே எனக்கு தெரியும்.

பொய் சொல்றாங்க
நான் ஏமாறல. நாங்க சந்தோஷமா இருக்க ஆசைப்படுறோம்.
இவ்ளோ நல்லா கல்யாணம் நடந்ததால திருஷ்டி பட்ருச்சு
இதையும் வென்று வருவேன். பீட்டர் பால் பத்தி அவருடைய முதல் மனைவி பொய் சொல்றாங்க நம்பாதீங்க. நான் தவறான பெண் கிடையாது. நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க என விளாசி தள்ளியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











