தடுப்பூசி போட்டுக்கறதுதான் கொரோனாவுக்கு எதிரா நாம செய்யக்கூடிய முதல் வேலை -சோனாக்ஷி உறுதி
மும்பை : இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் சூட்டிங் எதுவும் இன்றி வீட்டில் முடங்கியுள்ளார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கோவிட்டுக்கு எதிராக மக்கள் செய்யக்கூடிய முக்கியமான வேலை குறித்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர் செயல்பாடுகள்
கொரோனாவால் இந்திய அளவில் பாதிப்புகள் அதிகரித்துவந்த நிலையில், தொடர்ந்த லாக்டவுன் உள்ளிட்டவற்றால் கொரோனா தாக்கம் சிறிது மட்டு பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனாவிற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன.

சோனாக்ஷி விழிப்புணர்வு
திரைத்துறை பிரபலங்களும் தங்களால் இயன்ற அளவில் கொரோனாவிற்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த பணியில் லிங்கா படத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது சூட்டிங் இல்லாமல் வீட்டில் முடங்கியுள்ள அவர், ட்விட்டர் பக்கத்தின்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பொறுப்புடன் நடக்க வேண்டுகோள்
முன்னதாக அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் நாம் அனைவரும் இணைந்து பூமியின் சுற்றுப்புற சூழலை மோசமாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது சூழல் மாறியுள்ள நிலையில் அதை மாற்ற நாம் அனைவரும் தனிப்பட்ட முறையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

தடுப்பூசி முக்கியம்
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த கொரோனா சூழலை நாம் எதிர்கொள்ள வேண்டுமென்றால், முதலில் அதற்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கண்டிப்பாக மாஸ்க் அணிந்து சென்று தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும்
மேலும் குழப்பம், பதற்றம் ஆகியவை நம்மை சூழ்ந்துள்ளதாகவும் ஆனால் நாம் இந்த சூழலை பொறுமையாக ஒருங்கிணைப்புடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலை எதிர்கொள்வது நமது கைகளில்தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











