நீங்களும் வாங்களேன் ‘தளபதி 64’ படத்துல நடிக்கலாம்.. இப்ப புதுசா யார் சேர்ந்திருக்கா தெரியுமா?

சென்னை: 'தளபதி 64' படத்தில் நாளுக்கு நாள் இணையும் நட்சத்திர பட்டாளத்தின் பெயரை கேட்டாலே, லோகேஷ் கனகராஜ் ஏதோ தரமான சம்பவம் செய்ய தயார் ஆகிவிட்டார் என்றே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

சேவிய பிரிட்டோ ஃபிலிம் க்ரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தில் நடிகர் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ரம்யா, ஸ்ரீமன், ஆண்டனி வர்கீஸ், பிரிகிடா, மேத்யூ வர்கீஸ், அழகம் பெருமாள், பிரேம், சேத்தன், லின்ட்டு ரோனி என பல பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர்.

Yours Shamefully fame Soundarya Nandakumar joined in Thalapathy 64

இந்நிலையில், லேட்டஸ்ட் அடிஷனலாக Your's Shamefully குறும்படத்தின் மூலம் தமிழகத்தையே கலக்கிய பாடகி மற்றும் நடிகையான செளந்தர்யா நந்தகுமார் இணைந்துள்ளார்.

பகல் நிலவு தொடரில் நடித்து வந்த செளந்தர்யா நந்தகுமார், சசிகுமாரின் கொடிவீரன் படம் மற்றும் ரஜினியின் கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தளபதி 64 படத்தில் என்ன ரோலில் நடிக்கிறீங்க என்ற கேள்விக்கு, கப்சிப்பான செளந்தர்யா, விஜய்யுடன் நடிப்பதே தனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டம் எனக் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் கைதி படம் புதுவித அனுபவத்தையும், தமிழ் சினிமாவுக்கு சூப்பர் ஹிட் படத்தையும் கொடுத்துள்ள நிலையில், 'தளபதி 64' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கல்வி சம்மந்தமான ஊழல் குறித்து 'தளபதி 64' உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X