Youth Box Office: ஏகப்பட்ட பாசிடிவ் விமர்சனம்.. வசூலிலும் பட்டையைக் கிளப்பும் கென் கருணாஸின் யூத்!

சென்னை: நடிகர் கென் கருணாஸ் யூத் படத்தின் மூலம் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே அசுரன் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்திருந்தார். இப்படி இருக்கையில் பல ஆண்டுகளாக தான் யோசித்து எழுதிய கதையை இயக்கி நடித்துள்ளார். படம் மார்ச் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம்.

யூத் என்ற பெயரில் ஏற்கனவே நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். இந்த படத்தின் டைட்டிலை தனது படத்திற்கு கென் கருணாஸ் பயன்படுத்தி இருந்தாலும், படத்தில் அவர் சிம்பு ரசிகராகவே நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்க ஜி.வி. பிரகாஷ் குமார் சம்பளம் வாங்கவே இல்லை என்றும், பணமே வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கருணாஸ் தெரிவித்தார்.

Youth Box Office Ken Karunas Debut Film Earns 3 2 Cr on Day 1

படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, வேதவர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி பதிவிட்டு வருகிறர்கள். மேலும் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க நகைச்சுவையாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும், படம் முடியும் போது திருப்திகரமாக இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

பாசிடிவ் விமர்சனம்: படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே அதிகம் கிடைத்ததால் படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியின் போது, கென் கருணாஸின் தாயார் கிரேஸ் கருணாஸ் படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்ற குழப்பம் மற்றும் பயத்தில் அழுதார். ஆனால் தற்போது படம் கமர்ஷியலாக ஒர்க் -அவுட் ஆகும் என்ற நம்பிக்கை படக்குழு மத்தியில் முன்னர் இருந்ததைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.

Youth Box Office Ken Karunas Debut Film Earns 3 2 Cr on Day 1

வசூல்: இப்படி இருக்கையில் படம் முதல் நாளில் ரூபாய் 3.20 கோடிகளை வசூலித்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் மார்ச் 20ஆம் தேதி காலை 7.30 மணி நிலவரப்படி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. அதேபோல் படம் வார இறுதிக்குள் நல்ல வசூலை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X