Youth Day 4 Box Office - கென் கருணாஸின் யூத்.. நான்காவது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் சூப்பர் பாஸ்
சென்னை: கருணாஸின் மகனான கென் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் யூத். இதில் அவருடன் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமுடு, தேவதர்ஷினி, நளினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். முதன்முறையாக இயக்குநராக கென் அவதாரம் எடுத்திருப்பதாலும்; படத்தின் ட்ரெய்லர் எல்லாம் சூப்பர் வரவேற்பை பெற்றதாலும் பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்தது. சூழல் இப்படி இருக்க படம் வெளியாகி நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் கருணாஸ். சக்சஸ்ஃபுல் காமெடி ஆக்டராக வலம் வந்த அவருக்கு கென் என்ற மகன் இருக்கிறார். ஏற்கனவே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கென்; நீண்ட வருடங்கள் கழித்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். கண்டிப்பாக பெரிய அளவிலான ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டது.

உதவி இயக்குநர் கென்: அவர் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் இயக்கத்தின் மீதும் ஆர்வம் அதிகரித்திருந்தது. அதன் காரணமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் தனுஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் பயணித்து இயக்கம் தொடர்பான நுணுக்கங்களையும், வேலைகளையும் கற்றுக்கொண்டார். அதனையடுத்து படம் இயக்கலாம் என முடிவுக்கு வந்த அவர்; யூத்ஃபுல்லான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து; படத்துக்கு யூத் என்றே பெயர் வைத்தார்.
கென் கருணாஸின் யூத்: இப்படத்தில் அவருடன் சிறை புகழ் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சுராஜ் வெஞ்சரமுடு, தேவதர்ஷினி, நளினி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் சம்பளமே வாங்காமல் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் அட்ரெஸ்ஸாக ஜிவி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்காக அவர் இசையமைத்த முட்டை கலக்கி பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்து படத்தின் மீதான ஆவலை அதிகப்படுத்தியது. ட்ரெய்லரும் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது.
ரிலீஸான படம்: இப்படி ஓவர் ஹைப்பை சம்பாதித்து கடந்த 19ஆம் தேதி படமானது ரிலீஸானது. ரசிகர்கள் படத்துக்கு தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருக்கிறார்கள். படத்தில் சில இடங்களில் கென் சொதப்பி வைத்திருந்தாலும் மொத்தமாக பார்க்கும்போது ஒரு இயக்குநராக வென்றுவிட்டார் என புகழ்கிறார்கள். முக்கியமாக படத்தின் கடைசி 30 நிமிடங்களில் அனைவரையும் ஃபீல் செய்ய வைத்துவிட்டார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் வரிசையில் இணைந்திருக்கிறது.
படத்தின் வசூல் விவரம்: இந்நிலையில் படம் வெளியாகி நேற்றோடு நான்கு நாட்கள் முடிகின்றன. தற்போது அதன் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று இப்படமானது இந்தியாவில் மட்டும் 5.50 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறதாம். மொத்தம் நான்கு நாட்களில் 16 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாக அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது. ரிலீஸாகி நான்கு நாட்களில் 20 கோடி ரூபாயை வசூல் நெருங்கியிருப்பதால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications















