Youth Box Office: 8வது நாளிலும் நின்னு விளையாடும் ‘யூத்’.. சூர்யா, சிம்பு என கொண்டாடி தீர்த்துட்டாங்க!

சென்னை: துரந்தர் 2 படத்துக்கு நடிகர்களில் ரஜினிகாந்த் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். ஆனால், தமிழ் படமான கென் கருணாஸ் நடித்து இயக்கிய யூத் படத்துக்கு தனுஷ், சூர்யா மற்றும் சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை சட்டென வார நாட்கள் காரணமாக யூத் வசூல் குறைந்தது. அவ்வளவு தான் படிப்படியாக வசூல் அடுத்தடுத்த நாட்களில் குறைந்து விடும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருதிய நிலையில், செவ்வாய் மற்றும் புதன் என தொடர்ந்து தினமும் 2 கோடிக்கும் அதிகமான வசூலை கென் வசூலித்து வருகிறார்.

Youth Day 7 Box Office Collection Reports are stable and good
Photo Credit:

முட்ட கலக்கி, லவ்வ சொல்லிட்டாளே பாடலுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் ஆட்டம் போட்டு படத்தை பார்த்து வருகின்றனர்.

வார நாட்களிலும் தாக்குப்பிடிக்கும் யூத்: துரந்தர் 2 தமிழில் வெளியான நிலையில், யூத் படத்தின் வசூல் பெருமளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வார நாட்களிலும் தொடர்ந்து யூத் படத்துக்கு மக்கள் சப்போர்ட் அதிகரித்த வண்ணமே உள்ளது. திங்கள், செவ்வாய் மற்றும் புதன் என தினமும் தலா 2 கோடிக்கும் அதிகமான வசூலை ஒவ்வொரு நாளும் கென் இயக்கி நடித்துள்ள யூத் திரைப்படம் அள்ளி உள்ளது. இந்த வாரமும் படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூத் 7 நாள் வசூல்: கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள யூத் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 7வது நாளான நேற்று அதிகபட்சமாக 2.09 கோடி ரூபாய் வசூலை யூத் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்தியளவில் யூத் திரைப்படம் அதிகபட்சமாக 23.91 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 30 கோடிக்கும் அதிகமான வசூலை இந்த படம் கடந்துள்ளது. 8வது நாளான இன்றும் டிக்கெட் புக்கிங் சிறப்பாகவே உள்ளது என்கின்றனர். இந்த வாரம் ஹாப்பி ராஜ் வெளியாகவுள்ள நிலையில், வசூல் நிலவரம் எப்படி மாறும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

சூர்யா, சிம்பு வாழ்த்து: யூத் படக்குழுவினரை அழைத்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் சிம்பு உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். கருணாஸ் மகன் கென் இயக்குநராகவும் ஹீரோவாகவும் அசத்திய நிலையில், அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகளும் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X