யூத் வசூலுக்கு வேட்டு வைக்குமா துரந்தர் 2?.. தமிழ் டப்பிங் வந்துடுச்சு.. தெறிக்கும் டிக்கெட் புக்கிங்!

சென்னை: துரந்தர் 2 திரைப்படம் மே 18ம் தேதி மாலையே தமிழில் வெளியாகும் என எதிர்பார்த்து படத்தை புக் செய்த ரசிகர்கள் கடைசியில் படத்தை கேன்சல் செய்யும் நிலைமை ஏற்பட்டதால் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டனர்.

மே 19ம் தேதியாவது தமிழில் படம் வெளியாகும் என மீண்டும் புக் செய்து கேன்சல் செய்தனர். நேற்று படத்தின் தமிழ் CBFC சான்றிதழ் வெளியானதாக கூறப்பட்டது. நேற்றும் தமிழில் படம் வெளியாகும் என எதிர்பார்த்து ஏமாந்துப்போன ரசிகர்களுக்கு ஒருவழியாக ரமலான் பண்டிகையான இன்று தமிழ்நாட்டில் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் தமிழ் டப்பிங்கில் வெளியானது.

Youth movie box office will get slow down due to Dhurandhar 2 Tamil Version starts from Today
Photo Credit:

துரந்தர் 2 படத்துடன் தைரியமாக மோதிய கென் கருணாஸின் 'யூத்' திரைப்படம் கடந்த 2 நாட்களாக வசூல் வேட்டை நடத்திய நிலையில், துரந்தர் 2 தமிழ் டப்பிங் காரணமாக அதன் வசூல் வரும் நாட்களில் பாதிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கலக்கிய கென் கருணாஸ்: ஹீரோவாகவும் இயக்குநராகவும் கென் கருணாஸ் 'யூத்' படத்தின் மூலம் அசத்திவிட்டார். படத்தில் கதை எல்லாம் பெரிதாக இல்லை என்றாலும் அவரது நண்பர்கள் டீம் படம் முழுக்க செய்யும் காமெடி ரகளை தான் படத்தை தியேட்டர்களில் இளைஞர்கள் கொண்டாட காரணமாக உள்ளது என்கின்றனர். கருணாஸ் ஹீரோவாக நடித்த படங்கள் கூட இந்தளவுக்கு வரவேற்பை பெற்றிருக்காது என்றும் அப்பாவை மிஞ்சிவிட்டார் என்றும் பாராட்டி வருகின்றனர். தனுஷின் சிஷ்யனான கென் கருணாஸுக்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைக்க காரணமே படத்தின் டிரைலர் கட்ஸ் மற்றும் முட்ட கலக்கி பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது தான் காரணம் என்கின்றனர்.

Youth movie box office will get slow down due to Dhurandhar 2 Tamil Version starts from Today
Photo Credit:

துரந்தர் 2 சொதப்பலால் ஜாக்பாட்: துரந்தர் 2 திரைப்படம் இந்தியில் மட்டுமே வெளியான நிலையில், தமிழ்நாட்டில் பலரும் இந்தி தெரியாது போடா என விட்டுவிட துரந்தர் 2 தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறைவான வசூலையே அள்ளியது. ஆனால், அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்ட கென் கருணாஸுக்கு யூத் படம் மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது.

வசூல் பாதிக்குமா?: துரந்தர் இந்தி வெர்ஷனையே சப் டைட்டில் உடன் மல்டி பிளக்ஸில் குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் பார்த்தனர். ஆனால், இன்று முதல் தமிழில் படம் வெளியாகி உள்ள நிலையில், பலரும் அந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கேஜிஎஃப் 2 போல துரந்தர் 2 படமும் தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், இன்று முதல் யூத் படத்தின் வசூல் பாதிக்குமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், சனிக்கிழமையான இன்றும் யூத் படம் பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடி வருகிறது என்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை வரை யூத் படம் பக்காவாக கல்லா கட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதன் பிறகு வசூல் பாதிக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் முதல் 2 நாட்கள் வந்த வசூல் இன்றும் நாளையும் வருமா? என்பதும் டவுட்டு தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X