சிவகுமாருடன் செல்ஃபி எடுத்த வாலிபர்: வைரல் வீடியோ
Recommended Video

சென்னை: வாலிபர் ஒருவர் நடிகர் சிவகுமாருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துள்ளார்.
நடிகர் சிவகுமார் என்றாலே அவர் செல்ஃபிக்கு எதிரானவர் என்ற கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. தன்னிடம் அனுமதி கேட்காமல் செல்ஃபி எடுக்க முயன்ற 2 பேரின் செல்போன்களை தட்டிவிட்டார் அவர்.

அந்த காரணத்தால் தான் அவரை பக்ஷிராஜன் என்று கூறி கலாய்க்கிறார்கள். இந்நிலையில் அனுமதி கேட்ட வாலிபருக்கு செல்ஃபிக்காக போஸ் கொடுத்துள்ளார் சிவகுமார்.
அந்த வாலிபர் செல்ஃபி எடுத்து முடித்த பிறகும் கூட அங்கேயே நின்றுள்ளார். செல்ஃபி எடுத்த மகிழ்ச்சியில் அந்த வாலிபர் சிவகுமாருக்கு நன்றி தெரிவித்த வீடியோ வெளியாகியுள்ளது.
வயதில் பெரியவர், அவரின் அனுமதி கேட்டு செல்ஃபி எடுத்தால் வேண்டாம் என்று கூற மாட்டார். அதனால் அனுமதி கேட்கவும் என்று கூறி பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











