»   »  ரூ. 20 லட்சத்துடன் கைது-திமிரு வாங்க வந்தாரா?

ரூ. 20 லட்சத்துடன் கைது-திமிரு வாங்க வந்தாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை விமான நிலையத்தில் ரூ. 20 லட்சம் பணத்துடன் வந்த வாலிபர் பிடிப்பட்டார். பணத்துக்கு கணக்குகாட்ட முடியாமல் திணறிய அவரிடம் வருமான வரித்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

மதுரையில் இருந்து நேற்று மாலை சென்னைக்கு வந்த விமானத்திலிருந்து இறங்கிய வாலிபரின் சூட்கேசைசோதனையிட்டபோது அதில், ரூ. 20 லட்சம் இருந்தது.

இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது பெயர் பெயர் பிரதாப் (27) என்றும், நெல்லைமாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தென்காசி பாக்கியலட்சுமி தியேட்டரில்திரையிடுவதற்காக திமிரு படத்தை வாங்க பணம் எடுத்து வந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனாலும் திருப்தியடையாத அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித்துறைஅலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரித்தனர்.

இன்று காலை பிரதாப் வைத்திருந்த ரூ. 20 லட்சத்தை கைப்பற்றிய அதிகாரிகள், மேல் விசாரணைக்காக வருமானவரித்துறை தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு தொடர் விசாரணை நடந்து வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil