Paid Review: வீடியோவுக்குத்தான் காசு.. BP வந்து சாகுறதா.. It's பிரசாந்த் குறித்து அபிஷேக் ராஜா ஓபன்!

சென்னை: வார வாரம் ஞாயிற்றுக்கிழமை விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி சமூகத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு அதிர்வலையை, கவனத்தை, தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் அதாவது, ஜூன் 8ஆம் தேதி ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் திரைப்படத்தை விமர்சனம் செய்பவர்களுக்கும், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினருக்கும் இடையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றால் அது Paid Review என்பதுதான்.

இது தொடர்பாக நிகழ்ச்சியில் அபிஷேக் ராஜா பேசும்போது, ஒரு விமர்சனத்திற்கு அதிகம் பணம் வாங்குவதே It's பிரசாந்த் தான் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தினார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்ற பல விமர்சகர்கள் பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்கிறார்கள் என்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் அபிஷேக் ராஜா அண்மையில் அளித்துள்ள பேட்டியில் நீயா நானா நிகழ்ச்சியில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப் பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். அதாவது, " ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருள் தருகிறது. நான் It's பிரசாந்த் நோக்கி அதிக வருவாய் ஈட்டக்கூடிய விமர்சகர் என்று கூறியது, அவருக்கு யூடியூபில் வரும் வியூவ்ஸ், விளம்பரங்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறார் என்றுதான் நான் அர்த்தப்படுத்தினேன். ஆனால் அது வேறு விதமாக புரிந்து கொள்ளப்பட்டது.

Youtuber Abishek Raaja Expalins Its Prashanth and Paid Review After Neeya Naana
Photo Credit:

எது Paid Review : அதேபோல் Paid Review என்பதற்கு அர்த்தம் வேறு, அதாவது தயாரிப்பாளர்கள் படத்தை விமர்சனம் செய்யச் சொல்லி பணம் தருகிறார்கள், அதற்கு சிலர் பணமும் வாங்கிக் கொள்கிறார்கள். அதற்காக நான் விமர்சனத்தில் நான் என்ன பேசுகிறேன் என்பதை நீங்கள் கண்ட்ரோல் செய்ய முடியாது. அவர்கள் பணம் கொடுப்பது விமர்சனம் செய்வதற்கு தானே தவிர, விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அல்ல.

சின்ன படங்கள்: சிறிய படங்கள் வரும்போது அதையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை யூடியூபரின் கண்ணோட்டத்தில் அணுகுங்கள், ஒரு படத்தை விமர்சனம் செய்யும் போது அதற்கு ஒரு செலவு தேவைப்படுகிறது. ஆனால் வியூவ்ஸ் போகவில்லை என்றால் என்ன செய்வது? சில நேரங்களில் நானே சொல்லியிருக்கிறேன், குறைவான வியூவ்ஸ்கள் வந்து அதனால் மக்கள் மத்தியில் இந்த படம் சரியில்லையே என்ற எண்ணத்தைக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது? எனவே நான் விமர்சனம் செய்யவில்லை என்று கூறிவிட்டு, படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவேன்.

BP வந்து சாகுறதா : விமர்சகர்கள் வருடம் முழுவதும் ரிலீஸ் ஆகும் 250 படங்களையும் பார்த்து விமர்சனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இப்படிப் பார்த்தால் விமர்சகர் BP வந்து இறந்துவிடுவார். ஒரு வாரத்திற்கு இவ்வளவு படங்கள் தான் பார்க்க முடியும் என்ற கணக்கு வழக்கு அவர்களுக்கு உள்ளது. விமர்சகர்களை குறை சொல்லும் தயாரிப்பாளர்கள்தான் அவர்களின் சேனலுக்கு விளம்பரமும் கொடுக்கிறார்கள். உங்களுக்கு அந்த சேனலின் அந்த விமர்சகரின் ரீச் தேவைப்படுகிறது, ஆனால் அவர் பேசும் கண்டெண்ட் அதாவது விமர்சனம் மட்டும் கசக்கிறதா?" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேட்டி தற்போது திரைத்துறையில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X