TTF Vasan: நொறுங்கிப்போன 20 லட்சம் ரூபாய் பைக்.. வலியால் கதறும் டி.டி.எஃப் வாசன்!
சென்னை: ஹயபுசா பைக்கில் அதிவேகத்தில் சென்று அந்தர் பல்டி அடித்து விழுந்த டி.டி.எஃப் வாசனுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து வலி தாங்க முடியாமல் கதறும் வீடியோ வெளியாகி உள்ளது.
பைக் பயணங்களை மையமாகமாக வைத்து Youtube சேனல் நடத்தி வரும் டி.டி.எஃப் வாசன் உலகம் முழுவதும் பைக்கிள் பயணம் செய்து, இன்றைய இளம் தலைமுறை மனதில் இடம் பிடித்தார்.

Youtube சேனலில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் டி.டி.எஃப் வாசன் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
டி.டி.எஃப் வாசன்: பைக் ரைடு மூலம் பிரபலமான டி.டி.எஃப் வாசன் தனது பிறந்த நாள் அன்று பேன்ஸ் மீட் நடத்தினார்.அப்போது அந்த இடத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், அந்த இடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது தான் டி.டி.எஃப் வாசன் மீது, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சர்ச்சையில் சிக்கினார்: இதையடுத்து, பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அதிக வேகத்துடன் பயங்கர சத்தத்துடன் வாகனங்களை இயக்குவதாகவும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இவர் தவறான முன் உதாரணமாக இருக்கிறார் என அடுத்தடுத்த சர்ச்சையில் டி.டி.எஃப் வாசன் சிக்கி வந்தார்.
பல்டி அடித்த பைக்: இந்நிலையில் டிடிஎஃப் வாசன் நேற்று காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், இரு சக்கர வாகனத்தில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த விபத்தில் சிக்கினார். அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ததால், அவரது கட்டுப்பாட்டை இழந்து பறந்து சாலையோரத்தில் இருந்த புதரில் விழுந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட டி.டி.எப். வாசன் பலத்த காயம் அடைந்தார்.

அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்: டி.டி.எப் வாசனின் நண்பர், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கிய டி.டி.எப். வாசனுக்கு கையில் எலும்பு முறிவு மாவு கட்டுபோடப்பட்டுள்ளது. தலைக்கவசம் மற்றும் பைக் ரைடர் உடை அணிந்திருந்தால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். கையில் மாவு கட்டுடன் மருத்துவமனையில் இருந்து வலி தாங்க முடியாமல் வெளியே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நொறுங்கிப்போன 20 லட்சம் ரூபாய் பைக்: டி.டி.எப் வாசன் அண்மையில் ரூ 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுசுகி ஹையபுசா பைக்கை வாங்கினார். கடந்த மாதம் அவரது நண்பர்கள் ஹையபுசா பைக்கை எடுத்து சென்று கீழே போட்டுவிட்டதால், ரூ 2 லட்சம் ரூபாய் செலவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











