சென்னையில் புது வீடு.. ’புட் சட்னி’ ராஜ்மோகன் மனைவி மற்றும் இரு மகன்களுடன் சும்மா ஜமாய்க்கிறாரே!

சென்னை: புட் சட்னி யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ்மோகன் வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். பிளாக் ஷீப் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான பா பா பிளாக் ஷீப் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் அறிமுகமானார்.

இந்நிலையில் சென்னையில் புதிதாக வீடு வாங்கியுள்ளேன் என பதிவிட்டு உள்ளவர் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

Youtuber and Director Rajmohan buys a new house in Chennai and shares family photos

சென்னையில் வீடு வாங்குவது என்பது அனைவருக்கும் ஒரு பெரிய கனவாகவே இருந்து வருகிறது. வாழ்க்கையில் ஒரு மனிதன் சாதிக்க வேண்டும் என நினைக்கும் பக்கெட் லிஸ்ட்டில் சொந்த வீடு இன்றியமையாததாக உள்ளது. அதை தற்போது ராஜ்மோகன் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

யூடியூப் பிரபலம்: ஸ்மைல் சேட்டை, மெட்ராஸ் சென்ட்ரல் போன்ற யூடியூப் சேனல்கள் இருந்தபோது புட் சட்னி எனும் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் ராஜ்மோகன். தமிழில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தனியாக புத்தகங்கள் வாசிக்கும் யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கினார். மேலும், ராஜ்மோகன் ரிப்போர்ட் யூடியூப் சேனல் மற்றும் மனைவி கவிதா ராஜமோகன் விலாக் உள்ளிட்டவற்றில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Youtuber and Director Rajmohan buys a new house in Chennai and shares family photos


இயக்குநர் ராஜ்மோகன்: கடந்த ஆண்டு பிளாக் ஷீப் டீம் தயாரிப்பில் ராஜ்மோகன் இயக்கிய ”பா பா பிளாக் ஷீப்” திரைப்படம் ரிலீசானது. பிளாக்‌ ஷீப் டீமில் உள்ள பலர் அந்த படத்தில் நடித்திருந்தனர். ஹீரோயினாக அம்மு அபிராமியும் முக்கியமான வேடத்தில் விருமாண்டி அபிராமியும் நடித்திருந்தனர். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை ராஜ்மோகனுக்கு தரவில்லை.

Youtuber and Director Rajmohan buys a new house in Chennai and shares family photos


சென்னையில் புது வீடு: யூடியூபராகவும், இயக்குநராகவும் அடுத்தடுத்து தன்னை அப்கிரேட் செய்து கொண்டே போகும் ராஜ்மோகன் சென்னையில் தற்போது புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதன் புதுமனை புகுவிழா இன்று நடத்தியவர், தற்போது சமூக வலைத்தளங்களில் தனது மனைவி மற்றும் மகன்களுடன் புது வீட்டில் எடுத்துக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பகத் சிங் இல்லம்: ”சென்னையில் புது வீடு வாங்கி உள்ளோம். வீட்டின் பெயர் பகத்சிங் இல்லம். நீங்களும் உங்கள் பரிசுகளை அனுப்பலாம். வாயார வாழ்த்தும் வார்த்தைகளை விட வேறு பரிசு இருக்க முடியுமா என்ன?” என தனது சந்தோஷத்தை பதிவிட்டுள்ளார் ராஜ்மோகன். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X