உடலை பணமாக்கும் பெண்களை பார்த்து பெருமைப்படுகிறேன்.. யூடியூப் பிரபலத்தின் சர்ச்சை பேச்சு!

சென்னை: பிரபல யூடியூபரான அபூர்வா முகிஜா அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், தற்போது பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். இவரின் கருத்தால் கொந்தளித்து போன இணையவாசிகள் அபூர்வா முகிஜாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

அபூர்வா முகிஜா அண்மையில் அளித்த பேட்டியில், பெண்கள் தங்களது "பாலியல் தன்மையை பணமாக்குவது" பற்றி பேசி இருந்தார். அதில், உடலை பணமாக்கும் பெண்கள் மிகவும் புத்திசாலிகள் என்று தான் சொல்லுவேன், நீங்கள் அதிர்ஷ்டசாலியான பெண்களும் கூட, உங்களைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். ஆண்கள் பெண்களின் அழகை பார்க்கவும், அதற்கு பணம் செலுத்தவும் தயாராக இருந்தால் அதை செய்வதில் தவறு எதுவும் இல்லை. இதனால், எனக்கு அது மிகவும் பிடிக்கும், இந்த விஷயத்தில் ஆண்கள் தான் பார்வையாளராக இருக்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

சர்ச்சை பேச்சு: அபூர்வாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அவரின் பேச்சு வன்மையாக கண்டித்து திட்டி தீர்த்து வருகின்றனர். இணையவாசி ஒருவர் " பெண் உடல் என்ன காட்சி பொருளா... பணத்துக்காக பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும், சுய ஒழுக்கம் இல்லாத ஒருவரால் தான் இப்படி மோசமாக பேச முடியும், அபூர்வாவின் இந்த பேச்சு அவர் சுய ஒழுக்கம் இல்லாதவர் என்பதை காட்டுகிறது என்றார். மற்றொரு இணையவாசி, "நம் நாட்டில் இருக்கும் மிகப்பெரிய சாபக்கேடு, சமூக ஊடகத்தில் செல்வாக்கு பெற்றவர்கள், ஏதாவது ஒரு விஷயத்தை உளறி கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்றார்.

YouTuber Apoorva Mukhija
Photo Credit:

பெற்றோர் உடலுறவுவை பார்ப்பீர்களா: கடந்த சில மாதத்திற்கு முன்பு, அபூர்வா முகிஜா, இந்தியாவின் காட் லேட்டன்ட் சர்ச்சை காரணமாக சட்ட சிக்கலில் சிக்கினார். பீர் பைசெப்ஸ் என்று அழைக்கப்படும் ரன்வீர் அலஹாபாடியா, நிகழ்ச்சியில் போட்டியாளரிடம் உடல் பாகங்கள் தொடர்பான ஆபாசமான கேள்வி எழுப்பினார். இதுமட்டுமில்லாமல், "உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்க்கிறீர்களா? என்றும் அல்லது நிறுத்த முயற்சி செய்வீர்களா.. என்றும் சர்ச்சைக்குரிய கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அபூர்வா மற்றும் குழுவின் மற்ற உறுப்பினர்கள் மீது பல புகார்கள் பதிவு செய்யப்பட்டன.

மிரட்டினார்கள்: இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் அபூர்வா முகிஜா, அந்தத் தளத்தில் இருந்து தனது அனைத்து பதிவுகளையும் நீக்கியிருந்தார். மேலும், இணையவாசிகளால் மிரட்டப்பட்டதாகவும், தொடர்ந்து வந்த மிரட்டலால், ஒருவிதமான மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அபூர்வா முகிஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.அண்மையில் 'தி ட்ரெய்டர்ஸ்' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட அபூர்வா, கருத்துக்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அதாவது பணம் சம்பாதிப்பதற்காக தங்கள் உடல் அழகை வெளிக்காட்டும் பெண்களைப் பற்றி அவர் பெருமையாக பேசியது பல நெட்டிசன்களுக்கு பிடிக்கவில்லை. இதனாலேயே அவர் சமூக வலைத்தளங்களில் பலர், இவர் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X